Chennai Traffic Change: தலைநகரை அலறவிடும் கனமழை! சென்னையில் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!

First Published | Oct 15, 2024, 8:03 PM IST

Traffic change: தமிழகத்தில் கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழைநீர் தேங்கியுள்ளதால் சென்னையில் மாநகர பேருந்துகள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நேற்று முதல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், வரும் 17ம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கனமழை எச்சரிக்கையை அடுத்து தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள நீர் தேங்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தது. ஆனால்,  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஒரு பக்கம் மழை பெய்து வந்தாலும் மறுபுறம் மழைநீரை மோட்டார் பம்புகள் கொண்டு வெளியேற்றும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் சென்னை மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர்.  

இதையும் படிங்க: School College Holiday: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! பொதுத்துறை நிறுவனங்களுக்கும் குட்நியூஸ்!

Latest Videos


அதேபோல் சென்னையில் பெய்து வரும் மழையால் சுங்கப்பாதைகளிலும் மழை நீர் தேங்கி உள்ளதால் ஒரு சில சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் மாநகர பேருந்துகள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஓ.எம்.ஆர் சாலையில் பெருங்குடி, கந்தன்சாவடி ஆகிய பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதால் அவ்வழியாக செல்லும் பேருந்துகள் SRP, தரமணி, வேளச்சேரி, காமாட்சி மருத்துவமனை, ரேடியல் சாலை வழியாக சென்று துரைப்பாக்கம் சந்திப்பில் மீண்டும் ஓ.எம்.ஆர் சாலையில் தற்காலிகமாக இயக்கப்படுகிறது.

அதேபோல் 100 அடி சாலையில், எம்எம்டிஏ காலனி திரு நகர் அருகில் மழை நீர் தேங்கியுள்ளதால் அவ்வழியே கோயம்பேடு பேருந்து நிலையம் வரை இயங்கும் பேருந்துகள் வடபழனி பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

இதையும் படிங்க:  Chennai Heavy Rain Alert: சென்னை மக்களுக்கு அதிர்ச்சி! வானிலை மைய இயக்குநர் சொன்ன டேன்ஜர் அலர்ட்!

ஆவடி, அம்பத்தூரில் இருந்து கிண்டி மார்க்கமாக வரும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையம் வரை மட்டுமே தற்காலிகமாக இயக்கப்படுகிறது.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி செல்லும் பயணிகள் தடம் எண் 104C மற்றும் 104CX ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளவும் என்று மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!