Chennai Heavy Rain Alert: சென்னை மக்களுக்கு அதிர்ச்சி! வானிலை மைய இயக்குநர் சொன்ன டேன்ஜர் அலர்ட்!

First Published | Oct 15, 2024, 5:50 PM IST

Chennai Heavy Rain Alert: தென்மேற்கு பருவமழை நிறைவடைந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக தென்மண்டல வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

tamilnadu rain

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வந்த நிலையில் வானிலை அப்படியே முழுவதுமாக மாறியுள்ளது. எப்போதும் வடகிழக்கு பருவமழை டிசம்பரம் மாதத்தில் சென்னை மக்களை அச்சுறுத்தும் மழை தற்போது அக்டோபர் மாதமே தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனார். இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் நாளை மழை எப்படி இருக்கும் என்ற தகவலை வானிலை இயக்குநர் தெரிவித்துள்ளார். 

தென்மண்டல வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை நிறைவு பெற்று வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் வலு பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த  தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணிநேரத்தில் வட தமிழ்நாடு, புதுச்சேரி தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும். 

இதையும் படிங்க: School College Holiday: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! பொதுத்துறை நிறுவனங்களுக்கும் குட்நியூஸ்!

Tap to resize

காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வட திசை நோக்கி நகர்வதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் மழை மேலும் அதிகரிக்கக்கூடும். 

நாளை வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

இதையும் படிங்க:  Savukku Shankar: நெஞ்சு வலியால் அனுமதிக்கப்பட்ட சவுக்கு சங்கர் உடல் நிலை எப்படி இருக்கு? அவரே சொன்ன தகவல்!

வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் மேக கூட்டங்கள் 10 கிலோ மீட்டர் அகலத்திற்கு படர்ந்திருப்பதால் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை இயல்பை விட 84 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது. அடுத்த 4 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என தெரிவித்துள்ளார். 

Latest Videos

click me!