chennai electric train
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பண்டிகையைக் கொண்டாடும் வண்ணம் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் வருகின்ற திங்கள் கிழமை அதிகாலையில் மீண்டும் சென்னைக்கு ஒரே நேரத்தில் திரும்ப வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பேருந்துகள் மூலமாக 5 - 6 லட்சம் மக்களும், ரயில் மூலம் சுமார் 4 லட்சம் பயணிகளும் சென்னை திரும்புவார்கள் என்று தெரிகிறது.
electric train
சென்னைக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தோடு நிறுத்தப்படுவதால் அங்கிருந்து சென்னைக்குள் செல்ல மக்கள் சிரமங்களை சந்திக்கும் நிலை ஏற்படலாம். இதனை தவிர்க்கும் விதமாக தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல வசதியாக, வருகின்ற திங்கள் கிழமை அதிகாலை முதல் காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரம் வரை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
electric train
அதன்படி காட்டாங்குளத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து வருகின்ற திங்கள் கிழமை அதிகாலை 4 மணி, 4.30, 5, 5.45, 6.20 என சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்கள், கிளாம்பாக்கம் வரும் பயணிகளின் வசதிக்காக பொத்தேரி ரயில் நிலையத்தில் 5 நிமிடம் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.