மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொன்ன குட் நியூஸ்! அன்புமணி வெளியிட்ட முக்கிய தகவல்!

Published : Apr 20, 2025, 10:10 AM ISTUpdated : Apr 20, 2025, 10:24 AM IST

திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலை இரு வழிச்சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

PREV
15
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொன்ன குட் நியூஸ்! அன்புமணி வெளியிட்ட முக்கிய தகவல்!
Tindivanam - Krishnagiri 4 lane highway

திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலை இரு வழிச்சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுபற்றி பாமக தலைவர் அன்புமணி எம்.பி.க்கு அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளார். 

25
anbumani ramadoss

இரு வழிச்சாலை நான்கு வழிச்சாலை

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி டெல்லியில் சந்தித்து பேசினேன். திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான இரு வழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து அவை அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி விரிவான கடிதம்  எழுதியிருந்தேன்.

இதையும் படிங்க: திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த பாமக.! தமிழக அரசியலில் திடீர் எதிர்பாரா திருப்பம்
 

35
Accident

விபத்துகளை தவிர்க்க நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும்

திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை  இருவழிச்சாலையாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும்,  விபத்துகளைத் தவிர்க்க அதை நான்கு வழிச்சாலையாக  தரம் உயர்த்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தியிருந்தேன்.

45
Nitin Gadkari

விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆணை

அதைத் தொடர்ந்து அமைச்சர் நிதின் கட்கரி எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை   நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆணையிட்டிருப்பதாகவும்,  திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டவுடன் அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: திலகபாமாவை அரைவேக்காடு விமர்சித்த வடிவேல் ராவணன்! மறுநாளே அன்புமணி செய்த சம்பவம்!

55
Thank you Anbumani to Nitin Gadkari

நிதின் கட்கரிக்கு அன்புமணி நன்றி

மத்திய அமைச்சரின் கடிதம் மிகுந்த மனநிறைவு அளிக்கிறது. எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை  நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கும் என்று நம்புகிறேன் என அன்புமணி கூறியுள்ளார்.
 

Read more Photos on
click me!

Recommended Stories