நாங்குநேரி மாணவன் சின்னத்துரையை தாக்கியவர்கள் யார்.! சுற்றிவளைத்து பிடித்த பிடித்த போலீஸ்

Published : Apr 20, 2025, 08:42 AM IST

நாங்குநேரியில் ஜாதி ரீதியாக தாக்கப்பட்ட மாணவன் சின்னத்துரை மீண்டும் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறை ஜாதி ரீதியான தாக்குதல் என்பதை மறுத்த நிலையில், சின்னத்துரையை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

PREV
13
நாங்குநேரி மாணவன் சின்னத்துரையை தாக்கியவர்கள் யார்.! சுற்றிவளைத்து பிடித்த பிடித்த போலீஸ்

Nanguneri student chinnadurai : நெல்லை நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் சின்னத்துரை, இவர் மீது  கடந்த 2023ஆம் ஆண்டு பள்ளியில் சக மாணவர்கள் ஜாதி ரீதியாக தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே சின்னத்துரை இருந்த நிலையில், திடீரென வீட்டிற்குள் புகுந்த மாணவர்கள் அரிவாளால் சின்னத்துரையை வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த மாணவன் சின்னத்துரை தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

23
Nanguneri student Chinnadurai

சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல்

இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் விஜய் ஆகியோர் மாணவன் சின்னத்துரையை நேரில் அழைத்து உற்சாகப்படுத்தினர். இந்த நிலையில் மாணவன் சின்னத்துரையை மர்ம நபர்கள் மீண்டும் தாக்கியதாக தகவல் வெளியானது.

இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவன் சின்னத்துரை மீது ஜாதிய ரீதியிலான தாக்குதல் என விமர்சிக்கப்பட்டது. ஆனால் இதனை காவல்துறை முழுவதுமாக மறுத்திருந்தது. மாணவன் சின்னத்துரை கூறுகையில், "இன்ஸ்டாகிராம் செயலியில் என்னோடு படித்த பழைய நண்பன் என ஒருவன் கூறினான்.

33
Chinnadurai attack Case

2 பேர் கைது- 3 பேர் தலைமறைவு

திருமண பத்திரிகை வழங்க வேண்டும் அதனால் இங்கே வா என்று அழைத்தான். இதனையடுத்து தொடர்ந்து  வசந்தா நகர் பகுதிக்கு சென்ற நிலையில் மர்ம நபர்கள் தாக்கியதாக கூறியிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய நிலையில், மாணவன் சினத்துரையை தாக்கியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

போலீசாரின் தேடுதல் வேட்டையில் சக்திவேல், சங்கரநாராயணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் பரமேஸ், சண்முகசுந்தரம், வேல்முருகன் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories