திருச்சியில் நடைபெறும் மதச்சார்பின்மை பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தினார். பெரியார் குறித்த சீமானின் கருத்து தேவையற்ற சர்ச்சை என கூறினார்.
தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் திருச்சியில் நடைபெறும் மதச்சார்பின்னைக்கு எதிராக விசிக சார்பில் நடைபெறும் பேரணி அவசியமாகிறது. இந்த பேரணியில் மதச்சார்பின்மையை சார்ந்தவர்கள் பங்கேற்க வேண்டும் என வலியுத்தினார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை தராமல் வைத்திருப்பது கண்டனத்துக்குரியது நிதி தரவேண்டுமென முதலமைச்சர் வலியுறுத்திருக்கிறார்.
23
சீமானின் தேவையற்ற சர்ச்சை கருத்து
இனிமேல் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை வழங்கும் என்று நம்புவதாகவும் கூறினார். பெரியார் இல்லையென்றால் அதிகளவு விவசாயிகள் இருந்திருப்பார் என சீமான் கூறியது தொடர்பான கருத்திற்கு பதில் அளித்த அவர், பெரியார் பற்றி தொடர்ந்து குதர்க்கமாக பேசி வருவதாகவும், இது தேவையற்ற சர்ச்சை தமிழ்நாடு அரசியலை வேறொரு திசையைநோக்கி மடைமாற்றம் செய்ய விரும்புகிறார். அது தமிழகத்திற்கு நல்லது இல்லை என சுட்டி காட்ட விரும்புவதாக தெரிவித்தார்.
33
நகைக்கடன் திருமா கோரிக்கை
நகை கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது வரையறைகள் வெகுவான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் அனைத்து தரப்பு மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ரிசர்வ் அதனை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நகை கடன் வழங்குவதில் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தினார். அதிமுக பாஜக கூட்டணி இன்னும் உறுதிபடுத்தாமல் உள்ளது என்று தான் கூற காரணம் உடைய வேண்டும் என்பதற்காக அல்ல என தெரிவித்தார்.