Diwali Celebration
இந்த ஆண்டு மே மாதத்திற்கு அடுத்தபடியாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு செழிப்பான மாதமாக அக்டோபர் மாதம் அமைந்துள்ளது. அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி, 5, 6 (சனி, ஞாயிறு), 11ம் தேதி ஆயுத பூஜை, 12ம் தேதி விஜயதசமி, 13 - ஞாயிறு, 19, 20 (சனி, ஞாயிறு), 26, 27 (சனி, ஞாயிறு) என விடுமுறை நாட்கள் அடுத்தடுத்து நீண்டு கொண்டே செல்கிறது. மேலும் இந்த மாத இறுதியில் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்பட உள்ளது.
Government School Students
இந்த ஆண்டு வருகின்ற 31ம் தேதி தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்பட உள்ளது. 31ம் தேதி வியாழன் கிழமை என்பதால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஒரு நாள் மட்டும் தான் விடுமுறை கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வேலை நிமித்தமாக வெளியூர்களில் தங்கியிருக்கும் நபர்கள் பண்டிகையைக் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவது வழக்கம். பண்டிகை வெள்ளி, திங்கள் கிழமைகளில் வரும் பட்சத்தில் சனி, ஞாயிறுடன் சேர்த்து மொத்தம் 3 நாட்களுக்கு திட்டமிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வர்.
Government Bus
ஆனால் இந்த ஆண்டு வியாழன் கிழமை தீபாவளிப் பண்டிகை வருவதால் ஒரு நாள் மட்டுமே விடுமுறை கிடைக்கும் நிலை உள்ளது. இதனால் வெளியூர்களில் தங்கியிருப்பவர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவதில் மந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே தீபாவளிக்கு அடுத்த வெள்ளிக் கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Government Bus
பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசுப் பணியாளர்களின் கோரிக்கை குறித்து அரசுத்துறை அதிகாரிகள் விரைவில் ஆலோசனை மேற்கொண்டு மாணவர்களுக்கு சாதகமான அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோரிக்கையை ஏற்று வெள்ளிக் கிழமை விடுமுறை அளிக்கும் பட்சத்தில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.