Published : Oct 12, 2024, 12:49 PM ISTUpdated : Oct 12, 2024, 12:50 PM IST
10th 12th Public Exam datesதமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் 14ம் தேதி வெளியிடப்படும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோயம்புத்தூரில் இந்த அட்டவணையை வெளியிடுவார்.
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்பு தேர்வுகள் முக்கிய தேர்வாக பார்க்கப்படுகிறது. இந்த பொதுத் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படுகின்றன. குறிப்பாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் முக்கியம். ஏனென்றால் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி செல்வதற்கு 12ம் வகுப்பு மதிப்பெண் முக்கியத்துவம் வகிக்கும். அந்த வகையில் மருத்துவ படிப்பாக இருந்தாலும், பொறியியல் படிப்பாக இருந்தாலும், கலை அறிவியல் படிப்பாக இருந்தாலும் 12ம் வகுப்பு மதிப்பெண் முக்கியமானது.
24
School Student
இந்த மதிப்பெண்ணை வைத்தே மாணவர்களின் எதிர்கால படிப்பு நிர்ணயம் செய்யப்படும். இதற்காக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை தயார் படுத்துவதற்காக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதேபோல், 11, 12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி மாதத்திலும், 10ம் வகுப்புக்கு மார்ச் இறுதி வாரத்திலும் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.
கடந்த 2023- 24ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதியுடன் முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதேபோல 11ம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 4-ல் தொடங்கிய நிலையில், மார்ச் 25ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்: தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருடன் மேற்கொண்ட ஆலோசனையின் பேரில், அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோயம்புத்தூரில் வருகின்ற திங்கள்கிழமை அதாவது அக்டோபர் 14ம் தேதி காலை 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிடுகிறார்.