இரண்டு மணிநேர போராட்டம்; திருச்சியில் பத்திரமாக தரையிறங்கிய விமானம் - பைலட்டுக்கு குவியும் பாராட்டு!

First Published | Oct 11, 2024, 8:48 PM IST

Trichy Airport : இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு 144 பயணிகளுடன் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது ஏர் இந்தியா விமானம்.

Air india express

திருச்சி விமான நிலையம் இன்று மாலை மிகப் பெரிய சலசலப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்றால் அது மிகையல்ல. இன்று அக்டோபர் 11ம் தேதி மாலை சுமார் 5.40 மணியளவில் வழக்கம் போல திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு புறப்பட்டது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம். சுமார் 144 பயணிகள் மற்றும் விமான குழுவினருடன் அந்த விமானம் புறப்பட்டது. ஆனால் ஏர் இந்தியா விமானம் வானில் பறக்கத் தொடங்கிய வெகு சில நிமிடங்களிலேயே அந்த விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்துள்ளார்.

இதுக்கு ஒரு எண்டே இல்லையா? மீண்டும் ஜெட் வேகத்தில் ஏறும் தங்கத்தின் விலை - எவ்வளவு தெரியுமா?

Air india express trichy

அந்த விமானத்தின் லேண்டிங் கியர் சரிவர இயங்காத நிலையில், மீண்டும் அந்த விமானத்தை திருச்சியிலேயே தரையிறக்க விமானி முடிவு செய்து இருக்கிறார். இருப்பினும் அதிக எரிபொருளோடு விமான நிலையத்தில் இறங்கும் பொழுது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முதலில் தாங்கள் செய்ய வேண்டிய வழக்கமான செயல்பாட்டை செய்ய விமானி முடிவு எடுத்திருக்கிறார். அதனை எடுத்து விமானத்தில் உள்ள எரிபொருளை கூடுமான அளவிற்கு குறைக்க எண்ணி வானில் வட்டமிட்ட துவங்கியுள்ளார்.


Trichy Airport

இது விமானிகளுக்கு வழக்கமான ஒரு செயல்முறை என்றாலும், மிகவும் அரிதாக நடைபெறும் பிரச்சனை இது என்பதால் சுமார் 2 மணி நேரம் விமானம் வானில் பறந்தது, கீழே இருந்த மக்களுக்கும், விமானத்தில் பயணித்த 144 பயணிகளில் உறவினர்களுக்கும் மிகப்பெரிய பதட்டத்தை ஏற்படுத்தியது. ஆனால் விமானத்தின் உள்ளே பயணித்த ஒருவர் தற்போது அளித்த தகவலின்படி அவர்கள் சார்ஜாவிற்கு தான் சென்று கொண்டிருப்பதாக நினைத்ததாகவும். இறங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகத்தான் வண்டியில் இயந்திர கோளாறு இருப்பது தங்களுக்கு தெரிய வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

trichy airport

இந்நிலையில் சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு விமானியின் சாமர்த்தியத்தால் தற்பொழுது விமானம் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது. 144 பயணிகளும் பத்திரமாக இப்பொழுது விமானத்தில் இருந்து விமான நிலையத்திற்குள் சென்று வருகின்றனர். அவர்களில் யாருக்கேனும் முதல் உதவி தேவைப்படும் நிலையில் அவர்களை கவனிக்க விமான குழு தயார் நிலையில் அங்கு உள்ளது.

Southern Railway: தென்மாவட்ட ரயில் பயணிகளுக்கு! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Latest Videos

click me!