இதுக்கு ஒரு எண்டே இல்லையா? மீண்டும் ஜெட் வேகத்தில் ஏறும் தங்கத்தின் விலை - எவ்வளவு தெரியுமா?

First Published | Oct 11, 2024, 5:58 PM IST

Gold Price Increase : இது இல்லையா சார் ஒரு எண்டு என்று சொல்வதை போல நாளுக்கு நாள் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.

Gold Price

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது. இந்த வருடத்தின் இறுதியில் ஒரு சவரன் தங்கத்தின் விலை லட்சம் ரூபாயை எட்டினாலும் கொஞ்சம் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருவது அனைவரும் அறிந்தவையே. முன்பெல்லாம் ஆபரணங்களுக்காக மட்டுமே தங்கம் பெரிய அளவில் வாங்கப்பட்டது. ஆனால் இப்போது அது மிகப் பெரிய சேமிப்பு பொருளாக மாறி இருக்கிறது என்றே கூறலாம்.

Government Employees Bonus: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! ரூ.6000 போனஸ் அறிவிப்பு!

gold Jewels

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் டிரேடிங் போன்ற இணைய வழி சேமிப்பு திட்டங்களில் பயணித்து வருபவர்கள், அதிக அளவில் இப்போது தங்கத்திலும், வெள்ளியிலும் தான் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் பலரும் இப்படி தங்கத்தின் மீது ஆர்வம் காட்டி அதில் முதலீடு செய்வது தான் தொடர்ச்சியாக அதனுடைய விலை ஏறி வருவதற்கான முக்கிய காரணம் என்றும் சில நிபுணர்கள் கணித்திருக்கின்றனர்.


Gold price today

இந்த சூழலில் சென்னையை பொறுத்த வரை கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் அல்லது சிறிய அளவிலான இரக்கத்தோடு பயணித்து வந்த நிலையில், இன்று அக்டோபர் 11ம் தேதி தங்கம் மிகப்பெரிய அளவிலான உச்சத்தை பெற்றிருக்கிறது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து சுமார் 56,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல ஒரு கிராம் 7,025 ரூபாய்க்கு தங்கம் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Gold price chennai

இந்த சூழலில் ஆயுத பூஜை நாளான இன்று அது விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு சுமார் 560 ரூபாய் சட்டென்று உயர்ந்து இன்றைய தேதியில் ஒரு சவரன் தங்க நகை 56,760 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல ஒரு கிராம் தங்கத்தின் இன்றைய விலை சுமார் 7095 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 18 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே 18 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு 46,960 ரூபாய்க்கும் ஒரு கிராம் 18 காரட் தங்கத்தின் விலை 5870 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

பெரிய அளவில் தங்கத்தில் பலரும் முதலீடு செய்வது இந்த விலை ஏற்றத்திற்கு காரணமாக பார்க்கப்படும் அதை நேரம் தங்கத்திற்கான உள்நாட்டு தேவை இப்போது தொடர்ச்சியாக அதிகரிப்பதும் தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு ஒரு மிகமுக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. 

RBI Limits on UPI: UPI பயனர்களுக்கு RBI கொடுத்த சர்ப்ரைஸ் தீபாவளி பரிசு!

Latest Videos

click me!