Anbil Mahesh
தமிழகத்தில் பொதுவாக மே, ஜூன் மாதங்களில் அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம். மேலும் தனியார் பள்ளிகள் விஜயதசமி பண்டிகையின் போதும் பல்வேறு சலுகைகளை வழங்கி மாணவர் சேர்க்கையில் ஈடுபடுவர். இந்நிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை மேம்படுத்தும் வகையில் அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசு, தனியார் பள்ளிகளில் தற்போது இரண்டாம் பருவத்திற்கான பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது ஒருபுறம் இருக்க அரையாண்டு தேர்வு, தேர்வுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி டிசம்பர் 16ம் தேதியான திங்கள் கிழமை அரையாண்டு தேர்வுகள் தொடங்க உள்ளன.
மகளிர் உரிமை தொகையில் மேலும் 1000 ரூபாய் - உடனே விண்ணப்பிக்கவும்
Government School
தேர்வுகள் டிசம்பர் 23ம் தேதியுடன் நிறைவு பெறும் நிலையில் டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி புதன் கிழமை வரை என 9 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். பின்னர் ஜனவரி 2ம் தேதி வியாழன் கிழமை முதல் மூன்றாம் பருவத்திற்கான பாடங்கள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.