தமிழகத்தில் எகிறிய அரிசி விலை; கலக்கத்தில் இல்லத்தரசிகள் - என்ன தான் தீர்வு?

Published : Aug 26, 2024, 01:32 PM IST

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக சில்லறை விற்பனையில் அரிசியின் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் சற்று கவலை அடைந்துள்ளனர்.

PREV
15
தமிழகத்தில் எகிறிய அரிசி விலை; கலக்கத்தில் இல்லத்தரசிகள் - என்ன தான் தீர்வு?
Rice price hike in Tamil Nadu

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு எழுதியிருந்த கடிதத்தில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி தமிழகத்திற்கு வழங்கப்படும் அரிசியை தவிர்த்து பொது விநியோகத் திட்டமான மதிய உணவு மற்றும் காலை உணவு திட்டம், பொது விநியோகத் திட்டம் போன்ற திட்டங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 75 ஆயிரம் டன் அரிசி கூடுதலாக தேவைப்படுகிறது.

25
Rice price hike in Tamil Nadu

தமிழகத்திற்கு தேவைப்படும் கூடுதல் அரிசியை கிலோ ரூ.28க்கு இந்திய உணவுக் கழகம் மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரிசியை ஏற்கனவே வழங்கப்பட்டது போன்று கிலோ ரூ.20க்கு வழங்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.

35
Rice price hike in Tamil Nadu

இதனிடையே தமிழகத்தில் தற்போது புழுங்கல் அரிசி கிலோ ஒன்று ரூ.50 முதல் ரூ.76 வரை விற்கப்படுகிறது. அரிசியின் தரம் மற்றும் அதனை உற்பத்தி செய்யும் நிறுவனத்தைப் பொறுத்து விலை மாறுபட்டாலும் குறிப்பிட்ட பிராண்டட் அரிசிகள் ரூ.70க்கு மேல் தான் விற்பனை செய்யப்படுகின்றன.

45
Rice price hike in Tamil Nadu

இது தொடர்பாக அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் காரணமாக மேற்கத்திய நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டதால் அரிசிகளின் விலை கடுமையாக ஏற்றம் கண்டது. ஆனால் ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20 சதவீதம் வரி விதித்ததால் ஏற்றுமதி குறைந்து அரிசியின் விலை சீரானது.

55
Rice price hike in Tamil Nadu

ஆனால் தற்போது போக்குவரத்து செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலை ஏற்றம், வேலை ஆட்களுக்கான கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் சில்லறை விற்பனையில் அரிசியின் விலை மாற்றம் கண்டுள்ளதாக ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories