உச்சத்தில் பீட்ரூட் விலை
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 முதல் 40 ரூபாய் வரைக்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய் முதல் 90 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலையானது சற்று குறைந்து ஒரு கிலோ 50 முதல் 65 ரூபாய் வரைக்கும், இதே போல பச்சை மிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 85 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.