Train : நெல்லை, கோவைக்கு போறீங்களா.? சிறப்பு ரயில் அறிவிப்பு-எப்போ.? எங்கிருந்து- முன்பதிவு தொடங்கியதா.?

First Published Jul 19, 2024, 7:29 AM IST

நெல்லை மற்றும் கோவைக்கு ஏராளமான மக்கள் சுற்றுலா மற்றும் சோந்த ஊர்களுக்கு செல்ல  திட்டமிட்டுள்ள நிலையில் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. 

சிறப்பு ரயில் அறிவிப்பு

வார விடுமுறை மற்றும் சுற்றுலாவிற்கு நெல்லை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு ஏராளமான  மக்கள் செல்ல ஆர்வமாக உள்ளனர். ஆனால் ரயில்க்களில் முன்பதிவு முடிவடைந்த காரணத்தால் பேருந்துகளில் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு பெரும்பாலானவர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்து விடுகின்றனர். இந்தநிலையில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் இருந்து நெல்லைக்கும், கொச்சிவேலியில் இருந்து பருனே என்ற ஊருக்கும் ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

கோவை- பெரம்பூர் சிறப்பு ரயில்

தொடர்பாக தெற்குரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், கோடைகால சிறப்பு ரயிலாக கொச்சிவேலியில் இருந்து பருனை வரை ரயில இயக்கப்படுகிறது. கேரள மாநிலத்தில் இருந்து இயக்கப்படும் இந்த ரயில் கோவை வழியாக சென்னை பெரம்பூர் வரை இயக்கப்படுகிறது.  கொச்சுவேலியில் இருந்து 20ஆம் தேதி காலை 8 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் கொல்லம், மதிக்கரா,  கோட்டயம் ,ஆளுவா திருச்சூர், பாலக்காடு, கோயம்புத்தூர், ஈரோடு, சேல,ம் ஜோலார்பேட்டை, காட்பாடி பெரம்பூர் வழியாக பருனைக்கு இயக்கப்படுகிறது. 
 

Latest Videos


முன்பதிவு தொடக்கம்

இதே போல பருனையில் இருந்து கொச்சிவேலிக்கு 23ஆம் தேதி புறப்படுகிறது.  இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  மூன்று பகல் வேலைகளில் இந்த ரயில் தொடர்ந்து பயணம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ரயிலுக்கான எண் 06091- 06092- முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லைக்கு சிறப்பு ரயில்

இதே போல பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நெல்லைக்கு இன்று (19.07ழ2024)  சிறப்புரயிலானது இயக்கப்படுகிறது.  இந்த ரயிலானது ஒரு நாள் சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது.  

அந்த வகையில் இன்று இரவு 11.20 மணியளவில்  சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் புறப்படுகிறது இந்த ரயில் சென்னை எக்மோர், விழுப்புரம், திருச்சி, மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி என அடுத்த நாள் காலை 11:20 மணியளவில் நெல்லையை சென்று சேருகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு தொடங்கியது

இந்த ரயிலில் 16 முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளும், இரண்டு சாதாரண பெட்டிகளும், லக்கேஜ் ரயில் பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த ரயிலுக்கான எண் 06183- இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

click me!