குறிப்பாக மூத்த குடிமக்கள், ஆதரவு இல்லாதோர், நடக்க முடியாத நிலையில் உள்ள மக்கள் ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்களை வாங்குவதற்கு மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது. உணவுப்பொருட்களை வாங்க மற்ற நபர்களின் உதவியை நாடி வருகின்றனர். இதனால் வயது மூத்த மக்களுக்கு முதல் கட்டமாக உதவிடும் வகையில், வீடுகளுக்கே தேடிச்சென்று உணவுப்பொருட்களை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தை வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் சோதனை அடைப்படையில் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் தொடங்கப்படவுள்ளது. அந்த வகையில் சென்னை, ராணிப்பேட்டை, ஈரோடு, தர்மபுரி, நாகை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், நீலகிரி, கடலுார் ஆகிய மாவட்டங்களில் துவங்க உள்ளது.