கை நிறைய பணம் சம்பாதிப்பது எப்படி.? சொந்தமாக தொழில் தொடங்க அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட அரசு

Published : Jun 28, 2025, 07:58 AM IST

தமிழக அரசு, தொழில்முனைவோருக்கான இலவச பயிற்சிகளை வழங்குகிறது. தங்க நகை மதிப்பீட்டாளர் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி ஆகியவை இதில் அடங்கும். இந்த பயிற்சிகள் மூலம் தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

PREV
15
சொந்தமாக தொழில் செய்ய விரும்பும் இளைஞர்கள்

ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் வேலை தேடி வெளியூர்களுக்கு செல்கிறார்கள். குடும்ப சூழ்நிலை, அதிக வருமானம் உள்ளிட்ட காரணங்களுக்காக சொந்த ஊரை விட்டு வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். அதிலும் சிலர் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும். கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். எனவே தொழில்முனைவோர்களுக்கு தமிழக அரசு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதன் படி சொந்தமாக பேக்கரி வைக்கும் வகையில் "பிரவுனி வகைகள் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி" வழங்குகிறது. இது மட்டுமில்லாமல் தொழில்முனைவோர் ஐந்து நாட்கள் "தங்க நகை மதிப்பீட்டாளர் தொடர்பான பயிற்சி" வழங்கவுள்ளது. இது தொடர்பான வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

25
தமிழக அரசு வழங்கும் தொழில்முனைவோர் பயிற்சி

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி" 10.07.2025 முதல் 14.07.2025 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இப்பயிற்சி. இந்நிறுவன வளாகத்தில் நடைபெறும். 

இப்பயிற்சியில் தங்கம், வெள்ளி, போன்ற உலோகங்களின் தரம் அறிதல், கேரட் மதிப்பீடுகள், ஆசிட் சோதனை, எடை அளவு இணைப்பான், விலை நிர்ணயிக்கும் முறை (Board Rate), ஹால் மார்க் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணும் நடைமுறைகள் போன்றவை கற்றுத்தரப்படும். மேலும் ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறைகள், தங்க அணிகலன் வகைகள் பற்றிய பயிற்சியும் அளிக்கப்படும்.

35
தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கான வாய்ப்புகள், அவற்றை பெறும் நடைமுறைகள், அரசுத் திட்ட உதவிகள் மற்றும் மானியங்கள் குறித்த ஆலோசனைகளும் இந்த பயிற்சியில் வழங்கப்படும்.

பதிவு மற்றும் தொடர்பு விவரங்கள்

இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் ஆண் பெண் மற்றும் திருநங்கைகள் 18 வயதிற்கு மேல் மற்றும் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சிக்கு முன்பதிவு அவசியம். மேலும் விவரங்களுக்கு www.editn.in அல்லது 9543773337 / 9360221280 என்ற எண்களில் அலுவலக நேரத்தில் (திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) தொடர்புகொள்ளலாம். முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032.

45
பிரவுனி வகைகள் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி

இதே போல "பிரவுனி வகைகள் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி" வழங்கவுள்ளது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சென்னையில், 2 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 30.06.2025 முதல் 01.07.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. 

இப்பயிற்சியில் பேக்கரி தயாரிப்புகள் கிளாசிக் பிரவுனி, ப்ளாண்டீஸ் டிரிபிள் சாக்லேட் பிரவுனி நட்ஸ் ஓவர்லோடட் பிரவுனி, முட்டை இல்லாத பிரவுனி பழம் மற்றும் கொட்டை பிரவுனி பிரீமிக்ஸிலிருந்து பிரீமிக்ஸ் குறைந்த விலை முட்டை இல்லாத பிரவுனி கிரீம் சீஸ் பிரவுனி வீட்டில் பிரீமிக்ஸ் முட்டை இல்லாத ரெட்வெல்வெட் கிரீம் சீஸ் சுழல் பிரவுனி பிரீமியம் லோட்டஸ் பிஸ்காஃப் பிரவுனி, தினை பிரவுனி ஆரோக்கியமான பேரீச்சம்பழம் சாக்லேட் மற்றும் கலவை இல்லாத பிரவுனி வேர்க்கடலை வெண்ணெய் பிரவுனி பிரவுனி தயாரித்தல்

55
பயிற்சி பெற யாரை தொடர்பு கொள்வது.?

பிரவுனி கனாச் சிம்பிள் சாக்லேட் சாஸ் டப் பிரவுனி டிசைனர் பிரவுனி பேக்கிங் மற்றும் விலை, தயாரிப்பின் லேபிளிங் சந்தைப்படுத்தல் அம்சங்கள் வகைகள் எப்படி தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள். மேலும் தயாரிப்பு சந்தைப்படுத்துதலின் அம்சங்கள் பேக்கிங் லேபிளிங் மற்றும் அதற்காண விலை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும். அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும். இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032. 8668102600.

Read more Photos on
click me!

Recommended Stories