இதில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் நெல் தரிசில் பருத்தி 54.700 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு 7,700 மெட்ரிக்டன் பஞ்சு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆர்சிஎச் 659 பிஜி || ஆர்சிஎச் 386 பிஜி II, சூப்பர்காட் 115 பிஜி II, போன்ற பருத்தி இரகங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டன. நடப்பு ஆண்டில் 4.4 இலட்சம் ஏக்கரில் பருத்தி சாகுபடி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது டெல்டா மாவட்டங்களிலுள்ள 17 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 14,115 விவசாயிகள் மற்றும் 26 வர்த்தகர்கள் பருத்தி பரிவர்த்தனை செய்திட பதிவு செய்துள்ளனர். இதுவரை, 9 கோடி ரூபாய் மதிப்பிலான 1,511 மெட்ரிக் டன் பருத்தி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. பருத்தியின் தரத்திற்கேற்ப குவிண்டால் ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ.7,700. குறைந்தபட்ச விலையாக ரூ.4.111, சராசரி விலையாக ரூ.5,850 என்ற அளவில் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.