ஸ்விக்கி, ஜோமேட்டோ ஊழியர்கள்
போக்குவரத்து நெரிசல், வெயில், மழை என்று பல்வேறு சூழ்நிலையிலும் அவர்கள் வேலை செய்கிறார்கள். இதற்கு தீர்வாக பொது இடங்களில் அவர்களுக்கான ஓய்வு வசதிகளுடன் ஓய்வு அறைகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இதனை கருத்தில் கொண்டு ஸ்விக்கி, ஜோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் 24 மணிநேர உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்காக சென்னை மாநகராட்சி புதிய ஏற்பாடு செய்துள்ளது.
இதன் அடிப்படையில் சோதனை முறையில் சென்னை அண்ணா நகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏ.சி வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படவுள்ளது.