Published : Feb 14, 2025, 02:36 PM ISTUpdated : Feb 14, 2025, 02:39 PM IST
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்குப் பிறகு பனிப்பொழிவு மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பிப்ரவரி மாதத்திலேயே வெயில் வாட்டி வதைப்பதால், ஏப்ரல், மே மாதங்களில் நிலைமை எப்படி இருக்குமோ என மக்கள் கவலை கொள்கின்றனர்.
வெயில் காட்டு காட்டுன்னு காட்டப் போகுதாம்! பொதுமக்களுக்கு அலர்ட் கொடுக்கும் வானிலை மையம்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எந்த அளவுக்கு வெளுத்து வாங்கியதோ அதே அளவுக்கு பனி பொழிவு மற்றும் வெயில் தாக்கம் இருந்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்திலேயே வெளியே செல்வதற்கு அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்திலேயே வெயில் இப்படி வாட்டி வதைத்தால் வெயில் சுட்டெரிக்கும் மாதங்களான ஏப்ரல், மே மாதங்களில் நிலைமை எப்படி இருக்குமோ என பொதுமக்கள் இப்போதே புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.
25
சென்னை வானிலை மையம்
இந்நிலையில் வரும் நாட்களில் பனி பொழிவு மற்றும் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
16ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 17 முதல் 20ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.
45
வெப்பநிலை உயரும்
16ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 17 முதல் 20ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை கணித்துள்ளது.