Published : Feb 14, 2025, 11:14 AM ISTUpdated : Feb 14, 2025, 11:44 AM IST
தமிழகத்தில் 2024-25ம் கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை தேர்வுகள் நடைபெறும்.
தமிழகத்தில் 10, 11, 12ம் பொதுத்தேர்வு எப்போது? எத்தனை லட்சம் பேர் எழுதுகிறார்கள்! இதோ முழு விவரம்!
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெற்ற பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை முன்கூட்டிய அறிவிப்பது வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில், 2024-25ம் நடப்பாண்டிற்கான 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிகல்வித்துறை கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே வெளியிட்டிருந்தது.
26
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் ஏப்.15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டன.
அதன்படி தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 7 முதல் 14 வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை 7518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18, 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர். இவர்களுக்கான தேர்வு பணிகளை கண்காணிக்க 4 470 பறக்கும் படைகளும் 43,446 தேர்வு வரை கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
46
11ம் வகுப்பு பொதுத்தேர்வு
11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 5 முதல் 27 வரை நடைபெறுகிறது. இவர்களுக்கு செய்முறை தேர்வு மார்ச் 15 முதல் 21 வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை 7,557 பள்ளிகளில் படித்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்களும், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகளும், 4755 தனித் தேர்வுகளும், 137 சிறைவாசிகள் என 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர். இவர்களுக்கான தேர்வினை கண்காணிக்கும் படியில் 4470 பறக்கும் படையினரும் 44,236 தேர்வு வரை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் 10ம் தேதி வகுப்பு பொதுத் தேர்வினை பொறுத்தவரை மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெறுகிறது. இவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வினை 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்ர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர். இவர்களுக்கு தேர்வு எழுத 4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
66
ஹால் டிக்கெட்
மேலும் இவர்களுக்கான தேர்வு பணியினை கண்காணிக்க 4858 பறக்கும் படைகளும்,48,426 தேர்வு வரை கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 9ம் தேதி, 11 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 12 மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் பிப்ரவரி 17-ம் தேதியும், 11 மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் பிப்ரவரி 19-ம் தேதியும் வெளியிடப்படப்படுகிறது.