ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமன போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். செப்டம்பர் 3ஆம் தேதி முதல் பல்வேறு பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தான் மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆயுதமாகும். அந்த வகையில் கல்விக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. இந்த நிலையில் கலந்தாய்வு பணியானது நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட 2023 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையின்படி பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமன போட்டித்தேர்வு நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டுள்ள பணிநாடுநர்கள் பட்டியலில் உள்ள (Selection List)நபர்களுக்கு பணிநியமன கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
25
ஆசிரியர்கள் காலிப்பணியிடம்
சார்ந்த பாடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பணிநாடுநர்கள் கலந்தாய்வு நடைபெறும் மையங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட கடிதம் (CV Call letter) மற்றும் தற்காலிக தெரிவு கடிதம் (Provisional Selection Letter) ஆகியவற்றுடன் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்செய்திக்குறிப்பினை கலந்தாய்விற்கான அழைப்புக் கடிதமாக கருதி கீழ்க்காணும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நாளில் கலந்தாய்வில் கலந்து கொண்டு தங்களுக்குரிய பள்ளியினை தெரிவு செய்திடுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
35
ஆசிரியர்கள் கலந்தாய்வு
இந்த நிலையில் தமிழ் பாடத்திற்கு வருகின்ற செப்டம்பர் மூன்றாம் தேதி காலை 9 மணிக்கு கலந்தாய்வு நடைபெற இருப்பதாகவும், கலந்தாய்வில் காலையில் 200 பேரும் மாலையில் 200 பேர் என மொத்தம் 409 பேர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் திருவிக மேல்நிலைப்பள்ளி கலந்தாய்வு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலப் பாடத்திற்கு 3ஆம் தேதி காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளதாகவும் மொத்தமாக 269 பேருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழ்பாக்கத்தில் உள்ள சிஎஸ்ஐ பேயின் மெட்ரிக் பள்ளியில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது
கணித கலந்தாய்விற்கு 3ஆம் தேதி காலை 9 மணிக்கு முதல் நடைபெற உள்ளதாகவும் மொத்தமாக 240 பேர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்களுக்கான கலந்தாய்வு வித்யோதயா பள்ளியில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக அறிவியல் பாடத்திற்கான கலந்தாய்வு 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாகவும், மொத்தம் 293 பேர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் வேதியியல், உயிரியல், இயற்பியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு அசோக் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
55
கலந்தாய்வுக்கான பள்ளிகள் அறிவிப்பு
சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 3ஆம் தேதி நடைபெறும் எனவும் மொத்தமாக 409 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வில்லிங்டன் பள்ளியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து படங்களுக்கான கலந்தாய்வு 3ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைபெற உள்ளதாகும் புரசைவாக்கத்தில் உள்ள சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.