ரூ.7020 கோடி..! தமிழகத்திற்காக ஜெர்மனியில் முதலீடுகளை வாரி சுருட்டிய முதல்வர் ஸ்டாலின்

Published : Sep 02, 2025, 08:03 AM IST

ஜெர்மனி சுற்றுப்பயணத்தில் ரூ.3819 கோடி மதிப்புள்ள 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், ஜெர்மனியில் மொத்தம் ரூ.7020 கோடி மதிப்பில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

PREV
14
ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “எனது வெளிநாட்டு முதலீட்டு நோக்கத்தின் ஜெர்மனி பிரிவு ஒரு வலுவான குறிப்பில் முடிவடைகிறது.

24
23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

#TNRising Germany முதலீட்டு மாநாட்டில், ரூ. 3,819 கோடி மதிப்புள்ள 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன, அவை 9,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாகன கூறுகள் மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் உலகளாவிய தலைவர்கள் தங்கள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

34
ரூ.7020 கோடிக்கு முதலீடு

மொத்தத்தில், ரூ. 7,020 கோடி மதிப்புள்ள 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஜெர்மனி வருகையின் போது கையெழுத்திடப்பட்டுள்ளன, இது தமிழ்நாட்டில் 15,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #DravidianModel உரையாடல்களை உறுதிமொழிகளாகவும் நம்பிக்கையை உறுதியான வளர்ச்சியாகவும் மொழிபெயர்க்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

44
இந்தியாவின் ஜெர்மனி தமிழ்நாடு

மேலும் முதலீட்டாளர்கள் மத்தியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தொழில்துறையில் ஐரோப்பாவின் முதுகெலும்பாக ஜெர்மனி செயல்படுகிறது. அதே போன்று இந்தியாவின் ஜெர்மனியாக தமிழகம் செயல்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகம் தான் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பெற்று முன்னணியில் உள்ளது. ஜெர்மனி உடனான உறவை மேம்படுத்தும் விதமாக தமிழகத்தில் முதலீடு செய்யும் விதமாக உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். ஜெர்மனியின் துல்லியத்தையும், தமிழ்நாட்டின் ஆற்றலையும் ஒன்றிணைத்தால் புதிய வளர்ச்சிப் பாதையை உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories