Published : Nov 23, 2024, 12:58 PM ISTUpdated : Nov 23, 2024, 02:49 PM IST
9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. உயர்கல்வி சேர்க்கைக்கு மின்னஞ்சல் முகவரி அவசியம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2024 202ம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 10ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி (இ-மெயில்) தொடங்கும் செயல்பாடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளன.
25
School Education Department
இதுதொடர்பாக மாநிலத்திட்ட இயக்குனர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கான அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். அவ்வாறு விண்ணப்பிக்கும் நிலையில் பெரும்பாலான கல்லூரிகள், கல்லூரி சேர்க்கை சார்ந்த தகவல்களை மின்னஞ்சல் வாயிலாகவே மாணவர்களுக்கு வழங்குகின்றன. எனவே, ஒவ்வொரு மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரி இருத்தல் என்பது கட்டாயமான ஒன்றாகும்.
தலைமையாசிரியர் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர் பொறுப்புகள்:
* எனவே, 2024 2025 ஆம் கல்வியாண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் ஓர் மின்னஞ்சல் முகவரியினை வகுப்பு ஆசிரியர்கள் உதவியுடன், அவர்களாகவே உருவாக்குவதற்கு தக்க வழிகாட்டுதல்கள் வழங்கிட அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
* மாணவர்களுக்கான மின்னஞ்சல் உருவாக்குதல் குறித்த விளக்க காணொளி இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது.
* மாணவர்களுக்கு புதியதாக தொடங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியினை எமிக்ஸ் இணைய தளத்தில் பதிவிடுதல் வேண்டும்.
45
Email Address Mandatory
மாணவர்களுக்கான கூடுதல் விவரங்கள்:
* மின்னஞ்சலை உருவாக்கிய பின், மின்னஞ்சலுக்குள் எவ்வாறு உள்நுழைவது, மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவது. பெறப்பட்ட மின்னஞ்சலை எவ்வாறு திறந்து படிப்பது. மின்னஞ்சலில் இருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது குறித்து மாணவர்களுக்கு அனைத்து ஆசிரியர்களும் கற்பித்தல் வேண்டும்.
* அவ்வாறு உருவாக்கப்படும் மின்னஞ்சலின் கடவுச் சொல்லை (PASS WORD) மாணவர்கள் நினைவில் வைத்திருத்தல் வேண்டும் மற்றவர்களுக்கு பகிரக் கூடாது எனவும், இதன் மூலம் மற்றவர்கள் தங்கள் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துதலை தவிர்க்கலாம் என்கின்ற விவரங்களையும் மாணவர்களுக்கு வழங்கி ஆசிரியர்கள் வழிகாட்டிடல் வேண்டும்.
* ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மூலம் மாணவர்கள் புதியதாக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து cgtnss@gmail.com என்கின்ற மின்னஞ்சலுக்கு நான் புதிய மின்னஞ்சல் முகவரியினை பெற்றேன்" என்றும் உயர்கல்வியில் மாணவர்களின் இலக்கு என்னவாக இருக்கின்றது” என்கின்ற விவரத்தினை மாணவர்கள் மின்னஞ்சல் வாயிலாக அனுப்புவதற்கு வழிகாட்டுதல் வேண்டும்.
இச்செயல்பாட்டினை அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும் நவம்பர் 10ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை உயர்தொழில் நுட்ப ஆய்வத்தினை பயன்படுத்தி மேற்கொள்ளுதல் வேண்டும். மேற்குறிப்பிட்ட செயல்பாடு அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறுவதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.