பள்ளி மாணவர்களுக்கு வந்தாச்சு குட்நியூஸ்! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

First Published | Nov 22, 2024, 8:38 PM IST

தென்காசியில் கனமழை காரணமாக அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறைக்கு ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 23ம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்த நிலையில், வடகிழக்கு பருவமழையும் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வந்தது. இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரவு முதல் விடாமல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

இதனையடுத்து தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்தார். இருப்பினும் சில பள்ளிகளில் 10, 12-ம் வகுப்புகள் பெற்றது. இதுகுறித்து ஆட்சியருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, ஆட்சியரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அவசரமாக அந்த பள்ளிகளிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

Latest Videos


இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை அதாவது நவம்பர் 23ம் தேதி சனிக்கிழமை பள்ளி முழு வேலை நாளாகும் என அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

இந்நிலையில் நாளை பள்ளிகள் செயல்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை வாக்காளர் முகாம் (சேர்க்கை, நீக்கம் மற்றும் சரிபார்ப்பு) நடைபெறுவதால் நவம்பர் 23ம் தேதி பள்ளி வேலை நாள் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் 30ம் தேதி (சனிக்கிழமை) அன்று பள்ளி முழு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அனைத்து வகையான பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!