பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! 2025ம் ஆண்டு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா? வௌியான லிஸ்ட்!

First Published | Nov 22, 2024, 5:34 PM IST

2025-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின்படி, 23 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி மாதத்தில் பொங்கலுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

2024ம் ஆண்டு முடிவடைய இன்னும் 40 நாட்களே உள்ள நிலையில் 2025-ம் ஆண்டு நெருங்கி வரும் நிலையில் எத்தனை நாட்கள் பொது விடுமுறை நாட்கள் இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் அரசு ஊழியர்கள் ரொம்ப ஆர்வமாக இருப்பார்கள். அரசு விடுமுறை நாட்கள், வங்கி விடுமுறைகள், பொது விடுமுறைகள், மத்திய அரசு மற்றும் மாநில அரசு விடுமுறை என பல விடுமுறை நாட்கள் அடங்கும். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை  நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 08.06.1957 நாளிட்ட பொது-1. 20-25-26-ஆம் எண் அறிவிக்கையின்படி 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் XXV/1881) 25-ஆம் பிரிவில் விளக்கம்' என்பதன் கீழ் பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட "ஞாயிற்றுக் கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2025-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக கருதப்படும் என தமிழ்நாடு அரசு இதனால் அறிவிக்கிறது.

Tap to resize

Central Government

2025 அரசு பொது விடுமுறை நாட்கள்

ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டு (புதன்), ஜனவரி 14 பொங்கல் (செவ்வாய் கிழமை), ஜனவரி 15  திருவள்ளுவர் தினம் (புதன்), ஜனவரி 16 உழவர் திருநாள் (வியாழன்), 
ஜனவரி 26 குடியரசு தினம் (ஞாயிற்றுக்கிழமை), பிப்ரவரி 11 தைப்பூசம் (செவ்வாய்), மார்ச் 30 தெலுங்கு வருடப் பிறப்பு (ஞாயிற்றுக்கிழமை), மார்ச் 31 ரம்ஜான்( திங்கள்), ஏப்ரல் 1 வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு/ வணிக கூட்டுறவு( செவ்வாய்), ஏப்ரல் 10    மகாவீரர் ஜெயந்தி (வியாழக்கிழமை), ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு/ டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம்(திங்கள்), ஏப்ரல் 18 புனித வெள்ளி(வெள்ளி), மே 1 மே தினம் (வியாழக்கிழமை), ஜூன் 7 பக்ரீத் (சனிக்கிழமை), மொகரம் ஜூலை 7 (ஞாயிற்றுக்கிழமை), 

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்(வெள்ளிக்கிழமை), ஆகஸ்ட்  16 கிருஷ்ணர் ஜெயந்தி (சனிக்கிழமை), ஆகஸ்ட் 27 விநாயகர் சதூர்த்தி(புதன்கிழமை), செப்டம்பர் 05 மிலாதுன் நபி (வெள்ளிக்கிழமை), அக்டோபர் 01 ஆயுத பூஜை (புதன்),  அக்டோபர் 02 விஜயதசமி/ காந்தி ஜெயந்தி ( வியாழன்), அக்டோபர் 20 தீபாவளி (திங்கள்), டிசம்பர் 25 கிருஸ்துமஸ் (வியாழன்) இந்த விடுமுறை தமிழ்நாட்டிலுள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும். மொத்தம் 23 நாட்கள் பொது விடுமுறைகள் கிடக்கின்றன. 

ஜனவரி மாதத்தில் 14,15,16 ஆகிய நாட்கள் பொங்களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடக்கிறது. அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் விடுமுறை கிடக்கிறது. அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி, விஜயதசமி ஆகியவை ஒரே நாளில் வருகின்றன. நவம்பர் மாதத்தில் மட்டும் எந்த ஒரு பொது விடுமுறையும் இல்லை குறிப்பாக 2025-ம் ஆண்டில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளும் பொது விடுமுறை நாட்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos

click me!