TOUR PLAN : சென்னையில் இருந்து ஒரு நாள் சுற்றுலா.!எங்கெல்லாம் தெரியுமா.? டிடிடிசி அறிவித்த மூன்று டூர் பிளான்

First Published Jul 10, 2024, 3:12 PM IST

சுற்றுலா பயணிகளை குறைந்த செலவில் ஊரை சுற்றிக்காட்டும் வகையில் ஒரு நாள் சுற்றுலா தொகுப்பை தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் சென்னையில் இருந்து புறப்பட்டு மாமல்லபுரம்., புதுச்சேரி அல்லது காஞ்சிபுரம் என 3 வகையான பேக்கேஜை அறிவித்துள்ளது. மேலும் கட்டண சலுகையும் வெளியிட்டுள்ளது. 

3 புதிய டூர் பிளான்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவில் நீங்காத காட்சிகளை மனதில் பதிவு செய்ய பல்வேறு சுற்றுலா பயணத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் சென்னையில் இருந்து புதுச்சேரி, காஞ்சிபுரம், மாமல்லபுரம் என்ற 3 புதிய டூர் பிளானை அறிவித்துள்ளது. அந்த வகையில்  ஒரு நாள் சென்னை மாமல்லபுரம் சுற்றுலா பயணத்தில் வாலஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 9.00 மணிக்கு பேருந்து புறப்படுகிறது.

மாமல்லபுரம் டூர்

திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், சோழிங்கநல்லூர் இஸ்கான் டெம்பிள், முட்டுக்காடு தட்சண சித்ரா பாரம்பரிய அருங்காட்சியகம்,  முட்டுக்காடு படகு குழாம், சென்னை முதலைக் காப்பகம், சாளுவன்குப்பம் புலிக்குடைவரை, மாமல்லபுரம் ஐந்து ரதம், கடற்கரை கோவில், அர்ஜூனன் தபசு ஆகிய இடங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட்ட பின்னர் இரவு 7.00 மணிக்கு சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.

Kodaikanal : கொடைக்கானலுக்கு டூர் போறீங்களா.? சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்.! வெளியான முக்கிய அறிவிப்பு

Latest Videos


காஞ்சிபுரம் டூர்

ஒரு நாள் காஞ்சிபுரம் மாமல்லபுரம் சுற்றுலா பயணத்தில் வாலஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் பேருந்து அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில், அருள்மிகு காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவில், அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவில், கைத்தறி பட்டு அங்காடிகள் செல்லுதல்,

மாமல்லபுரம் ஐந்து ரதம், கடற்கரை கோவில், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, முட்டுக்காடு படகு குழாம் ஆகிய இடங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட்ட பின்னர் இரவு 7.00 மணிக்கு சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.

புதுச்சேரி டூர்

ஒரு நாள் பாண்டிச்சேரி சுற்றுலா பயணத்தில் வாலஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் பேருந்து புகழ்பெற்ற ஆரோவில் சுற்றுலாத்தலம், பாண்டிச்சேரி அருங்காட்சியகம், பாண்டிச்சேரி கடற்கரை, அரவிந்தர் ஆசிரமம், முதலியார் குப்பம் படகு குழாம் ஆகிய இடங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட்ட பின்னர் இரவு 7.00 மணிக்கு சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.

Bajaj CNG Bike: 100 ரூபாய்க்கு 100 கிமீ மைலேஜ் தரும் பஜாஜ் சிஎன்ஜி பைக் விலை எவ்வளவு?

சலுகை கட்டணம் அறிவிப்பு

இந்த சுற்றுலா பயணத்திட்டங்களை மேற்கொள்ள 10 இருக்கைகளுக்கு சேர்ந்தாற்போல் முன்பதிவு செய்பவர்கள் மற்றும் மேல் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணச் சலுகை அளிக்கப்படுகின்றது. சுற்றுலா பயணிகளின் பயணத்திற்காக 2 வால்வோ ரக சொகுசு பேருந்துகள், 5 அதிநவீன சொகுசு பேருந்துகள் என ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  

click me!