Bajaj CNG Bike: 100 ரூபாய்க்கு 100 கிமீ மைலேஜ் தரும் பஜாஜ் சிஎன்ஜி பைக் விலை எவ்வளவு?
உலகின் முதல் சிஎன்ஜி பைக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுள்ளது. இது 100 ரூபாய்க்கு 100 கிலோமீட்டர் ஓடும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Bajaj CNG Bike
உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. நல்ல மைலேஜ் தரும் சிஎன்ஜி பைக் பற்றிய முக்கிய விவரங்களை காணலாம். நீங்கள் புதிய பைக் அல்லது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க நினைத்தால் உங்களுக்கான செய்திதான் இது.
Bajaj CNG Bike Price
பஜாஜ் நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை ஜூலை 5ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த பைக் இயங்கும் செலவை 50 சதவீதம் குறைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. உதாரணமாக, உங்கள் பைக் ஒரு லிட்டர் எரிபொருளில் 50 கிமீ மைலேஜ் கொடுத்தால், 100 கிமீ ஓடுவதற்கு 2 லிட்டர் எரிபொருள் தேவைப்படும்.
Bajaj CNG Bike launch
2 லிட்டர் எரிபொருளின் விலை 200 ரூபாய் ஆகும். பஜாஜின் சிஎன்ஜி பைக் இயங்கும் செலவை 50 சதவீதம் குறைக்கும் அதே வேளையில், 100 கிமீ ஓடுவதற்கு 100 ரூபாய் செலவாகும். உலகின் முதல் சிஎன்ஜி பைக்குக்கு பஜாஜ் ஃப்ரீடம் 125 என்ற பெயரை வைத்துள்ளனர். பஜாஜ் ஃப்ரீடம் 125 வகைகள் என்ஜி04 டிரம், என்ஜி04 டிரம் எல்இடி மற்றும் என்ஜி04 டிஸ்க் எல்இடி ஆகும்.
Bajaj CNG Bike Mileage
மூன்று வகையாக வேரியண்ட் வாரியான பஜாஜ் ஃப்ரீடம் 125 விலை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது. பஜாஜ் ஃப்ரீடம் 125 NG04 டிரம் ரூ 95,000, பஜாஜ் ஃப்ரீடம் 125 என்ஜி04 டிரம் எல்இடி - ரூ 1.05 லட்சம், பஜாஜ் ஃப்ரீடம் 125 என்ஜி04 டிஸ்க் எல்இடி - ரூ 1.10 லட்சம் விலையில் விற்கப்படுகிறது.
330 கிமீ வரை மைலேஜ்.. உலகின் முதல் சிஎன்ஜி பைக்.. பஜாஜின் ஃப்ரீடம் 125.. விலை ரொம்ப கம்மி!