ஆசிரியர் உயிரை பறித்த திமுக அரசு.. கொஞ்சம் கூட கவலையின்றி Vibe செய்யும் ஸ்டாலின்.. இபிஎஸ் ஆவேசம்!

Published : Jan 14, 2026, 09:24 PM IST

ஆசிரியர் ஒருவர் மரணித்துவிட்ட கவலை கொஞ்சம் கூட இல்லாமல், கவிதை பாட சொல்லி "Vibe" செய்து கொண்டிருக்கிறாரே மு.க.ஸ்டாலின் என்று இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

PREV
13
ஆசிரியர் தற்கொலை

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த பெரம்பலூரை சேர்ந்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் என்பவர் பூச்சி மருத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். போராட்டக்களத்தில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

23
எடப்பாடி பழனிசாமி திமுகவுக்கு கண்டனம்

ஆசிரியர் கண்ணன் மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், பகுதி நேர ஆசிரியரின் உயிரை திமுக அரசு பறித்து விட்டு கொஞ்சம் கூட கவலையின்றி முதல்வர் ஸ்டாலின் Vibe செய்வதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் உயிரை பறித்த திமுக அரசு

இது தொடர்பாக இபிஎஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பொய் வாக்குறுதி தந்து, ஆட்சிக்கு வந்தபின் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர் கண்ணன் அவர்களின் உயிரை பறித்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

33
கவிதை பாட சொல்லி "Vibe" செய்யும் ஸ்டாலின்

திமுக கொடுத்த வாக்குறுதிகளால் பணி‌ நிரந்தரம் ஆகிவிடும் எனும் நம்பிக்கையில் காத்திருந்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் அவர்கள், விஷம் அருந்தி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. 

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் சக ஆசிரியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். ஆசிரியர் ஒருவர் மரணித்துவிட்ட கவலை கொஞ்சம் கூட இல்லாமல், கவிதை பாட சொல்லி "Vibe" செய்து கொண்டிருக்கிறாரே மு.க.ஸ்டாலின்.

ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்

முதல்வர் என்ற உயர்வான பதவிக்கே இந்த Failure Model முதல்வர் ஒரு இழுக்கு. உயிரிழந்த கண்ணன் அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த அரசு உடனடியாக ரூ.50 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். 

மேலும் போராட்டத்தில் ஈடுபடுவோர், இதுபோன்ற முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories