ஜனவரி 19 அன்று இரவு 11.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - கோவை சிறப்பு ரயில் (வ.எண்: 06033) ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 21 அன்று நள்ளிரவு 12.35 மணிக்கு போத்தனூரிலிருந்து புறப்பட வேண்டிய போத்தனூர் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (வ.எண்: 06024) ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் ஜனவரி 21 அன்று மதியம் 1.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - போத்தனூர் சிறப்பு ரயிலும் (வ.எண்: 06023) ரத்து செய்யப்பட்டுள்ளது
பயணிகளிடம் வரவேற்பு இல்லை
மேற்கண்ட சிறப்பு ரயில்கள் அனைத்தும் தலா 1 முறை மட்டுமே இயக்கப்பட இருந்தன. ஆனால் இந்த ரயில்களுக்கு முன்பதிவு செய்ய பயணிகள் ஆர்வம் காட்டவில்லை. பயணிகள் இல்லாத ரயிலை இயக்குவது பெரும் நஷ்டத்துக்கு வழிவகுக்கும் என்பதால் தெற்கு ரயில்வே இந்த ரயில்களை ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.