Published : May 29, 2025, 03:33 PM ISTUpdated : May 30, 2025, 02:44 PM IST
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை நிறைவுபெற்று வருகின்ற 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், முதல் நாளிலேயே அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பட்டியலிட்டு அதிரடி காட்டி உள்ளார்.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறையானது ஏப்ரல் 25ம் தேதி தொடங்கியது. மே மாதம் தொடக்கத்தில் வெப்பம் அதிகம் இருந்ததால் கோடை விடுமுறை நீட்டிக்கப்படலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால், பருவமழையானது வழக்கத்திற்கு முன்னதாகவே தொடங்கி உள்ளதால் தமிழகம் முழுவதும் இதமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் தொடங்கப்படும் என்று முதன்மை கல்வி அதிகாரி உறுதி படுத்தி உள்ளார்.
24
Anbil Mahesh
இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் வீடியோ கால் மூலமாக நடத்திய ஆலோசனையில், சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். அதன்படி பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே கிராமப்புறங்களில் இருந்து பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதி இருக்கிறதா என்பதை முதன்மை கல்வி அதிகாரிகள், போக்குவரத்து அதிகாரிகளுடன் இணைந்து கண்காணிக்க வேண்டும். தேவைப்படும் பகுதிகளில் பேருந்து வசதியை ஏற்படுத்த முற்பட வேண்டும்.
34
Minister Anbil Mahesh
பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிளேயே மாணவர்களுக்கான இலவச நோட்டு, புத்தகம், புத்தக பை உள்ளிட்டவை விநியோகிக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கான உபகரணங்கள் தற்போதே தேவையான அளவிற்கு வந்துவிட்டதா என்பதை கல்வி அதிகாரிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், முதல்வரின் காலை உணவு திட்டத்தை முதல் நாளிலேயே தரமான முறையில் தொடங்க வேண்டும். மதிய உணவுக்கு பின்னர் மாணவர்களுக்கு 20 நிமிடங்கள் நாளிதழ்களை வாசிக்கும் வகையில் நேரம் ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை தோறும் மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.