இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மானியம் கிடைக்கும் என்று சொல்வது மட்டும் முழுமையான தகவல் அல்ல. நிலத்தின் சந்தை மதிப்பை அடிப்படையாகக் கொண்டு, திட்டத் தொகையில் 50% அல்லது ரூ.5 லட்சம் — இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும்.
உதாரணமாக, தகுதியான நிலத்தின் திட்டத் தொகை ரூ.8 லட்சம் என்றால், 50% கணக்கில் ரூ.4 லட்சம் மானியம் கிடைக்கலாம். அதேபோல், திட்டத் தொகை ரூ.12 லட்சம் என்றால் 50% ரூ.6 லட்சமாக இருந்தாலும், அதிகபட்ச மானியம் ரூ.5 லட்சம் என்பதால் ரூ.5 லட்சம் வரைதான் கிடைக்கும்.
நிலத்தின் அளவுக்கும் வரம்பு உள்ளது:
நஞ்சை நிலம்: அதிகபட்சம் 2.5 ஏக்கர்
புஞ்சை நிலம்: அதிகபட்சம் 5 ஏக்கர்
மேலும், இந்தத் திட்டத்தில் வாங்கப்படும் நிலத்தை 10 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக்கூடாது.
இதையும் படிங்க : Amazon Sale : ₹5,000 முதல் ₹50,000 வரை சேமிக்கலாம்! அக்டோபர் 8க்கு முன் இந்த 10 பொருட்களை வாங்காதீங்க!