Today Rain: இன்று 5 மாவட்டங்களை குறிவைக்கும் மழை.. உங்க ஊரில் எப்படி இருக்கும்?

Published : Sep 24, 2026, 09:46 AM IST

Tamil Nadu Rain Alert: தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை எப்படி? இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை யாருக்கு? வானிலை முன்னறிவிப்பு விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
15
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

குடையை மறந்துட்டு வெளியே கிளம்பிடாதீங்க. தமிழகத்தில் இன்று வெயில் இருந்தாலும் திடீரென வானம் மாறி மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும். எனவே வேலை, பள்ளி, கல்லூரி என வெளியே செல்பவர்கள் இன்றைய வானிலை நிலவரத்தை தெரிந்துகொண்டு கிளம்புவது நல்லது.

25
இன்று எந்தெந்த பகுதிகளில் மழை?

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல அமைப்புகளே மழை வாய்ப்புக்கு முக்கிய காரணமாக உள்ளன.

இன்று (செப்டம்பர் 24 - வியாழக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுடன் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஆங்காங்கே லேசான மழைக்கான வாய்ப்பு உள்ளது.

35
சென்னையில் இன்று மழை எப்படி?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். குறிப்பாக மாலை அல்லது இரவு நேரத்தில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

45
மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகம் வரையிலும், தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் 60 கி.மீ. வேகம் வரையிலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதடனால், சம்பந்தப்பட்ட கடல் பகுதிகளுக்குச் செல்லும் முன் மீனவர்கள் அன்றைய அதிகாரப்பூர்வ கடல் எச்சரிக்கையை சரிபார்ப்பது அவசியம்.

55
நாளை, நாளை மறுநாள் எப்படி?

செப்டம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுடன் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories