டாஸ்மாக் பிரியர்களுக்கு அதிர்ச்சி: அக்டோபர் முதல் பாட்டிலுக்கு ரூ.20 வரை விலை உயர்வு; புதிய வரி விதிக்க தமிழக அரசு முடிவு?

Published : Sep 23, 2026, 12:09 PM IST

தமிழ்நாட்டில் மதுபானம் விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு மதுபாட்டிலுக்கு ரூ.20 வரை புதிய வரி விதிக்க தமிழக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மதுபான விற்பனையின் மீது சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

PREV
14
டாஸ்மாக் மதுபானங்களின் விலை விரைவில் உயர்வு

தமிழக அரசின் டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களின் விலையை, அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து பாட்டிலுக்கு ரூ.10 வரை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. காலி மது பாட்டில்களை மறுசுழற்சி செய்வதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

24
ஒரு பாட்டிலுக்கு ரூ.10 உயர்த்த தமிழக அரசு திட்டம்

தமிழகத்தில் சில்லறை விற்பனை மூலம் மதுபானங்களை விற்பனை செய்யும் பணியில் டாஸ்மாக் நிறுவனம் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், மது பாட்டில்களுக்கு ரூ.20-க்கு மிகாமல் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை விதிக்கும் வகையில், ‘தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்டம், 2006’-ல் பிரிவு 3-ஏ என்ற புதிய சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்திற்குத் தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன் மூலம் வெவ்வேறு வகையான மதுபானங்கள் மற்றும் பாட்டில்களின் அளவுகளுக்கு ஏற்ப, அரசு தனது அதிகாரப்பூர்வ அறிவிக்கை வாயிலாக அதிகபட்சமாக ரூ.20 வரை வரியை நிர்ணயித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

34
வரி வருவாய் எதற்குப் பயன்படுத்தப்படும்?

இந்த புதிய வரி விதிப்பின் மூலம் கிடைக்கும் நிதி பல்வேறு நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது. காலி மதுபான பாட்டில்களை மறுசுழற்சி செய்தல், மீண்டும் பயன்படுத்துதல் மற்றும் பாதுகாப்பாக அகற்றுதல். மதுப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் மற்றும் அப்பழக்கத்தில் இருந்து விடுவிக்கும் திட்டங்களைச் செயல்படுத்துதல்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான வாழ்வாதார உதவிகள் மற்றும் நலத்திட்டங்களை வழங்குதல். மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை முன்னெடுத்தல். சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாத்தல், மீட்டெடுத்தல் போன்ற சமூக நலப் பணிகள்.

44
அதிகாரி விளக்கம்: கூடுதல் வசூல் புகாருக்கு முற்றுப்புள்ளி

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், தற்போது மதுக்கடைகளில் பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் போது அதிகபட்ச சில்லறை விலையுடன் (MRP) சேர்த்து கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டு வருகிறது. காலி பாட்டிலைத் திரும்ப ஒப்படைக்கும்போது அந்த ரூ.10 திரும்ப வழங்கப்படுகிறது.

புதிய சட்ட விதிகளின்படி அதிகபட்சமாக ரூ.20 வரை உயர்த்த வாய்ப்பிருந்தாலும், பாட்டிலுக்கு ரூ.10 மட்டும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வுக்குப் பிறகு, கடைகளில் மது பாட்டில் விலையுடன் கூடுதலாகப் பணம் வசூலிக்கும் சூழல் ஏற்படாது. மதுராந்தகம் மற்றும் திருப்பூர் இடைத்தேர்தல் முடிந்த பிறகு, அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வரவுள்ளது என்றார்.

Read more Photos on
click me!

Recommended Stories