அக்டோபர் 13 வரை தென் இந்தியா முழுவதும் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், தெற்கு உள் கர்நாடகம், கடலோர ஆந்திரப் பிரதேசம், ஏனம், கேரளா மற்றும் மாஹே ஆகிய பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று எங்கெங்கு மழை பெய்யும்?
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.