அடங்க மறு.. அத்து மீறு குரூப்பா நீ..! சினிமாவுலதான் பேச முடியும்..வெளியே வந்து பேசி பாரு?எச்.ராஜாவுக்கு திருமா எச்சரிக்கை

Published : Oct 11, 2025, 10:07 PM IST

எச்.ராஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்பட வசனத்தைக் குறிப்பிட்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன் திரைப்படத்தில் மட்டும் தான் இப்படி பேச முடியும் வெளியே வந்து பேசி பாரு என கருத்து தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

PREV
13
அடங்கமறு, அத்துமீறு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தனது தொண்டர்கள் மத்தியில் அடங்கமறு, அத்துமீறு என்ற வாசகத்தை வெளிப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அடக்குமுறைகளுக்கு எதிரான கோட்பாடாக இதனை கூறும் திருமா ஒவ்வொரு மேடையிலும் இதனை தெரிவித்து வருகிறார்.

23
கந்தன் மலை

இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையை வைத்து இருவேறு பிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், இதனை மையமாகக் கொண்டு திரைப்படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கதாநாயகனாக உருவெடுத்துள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. அந்த படத்தில் திருமாவின் சிக்னேசர் டயலாக்கை, ஓஹ் அடங்கமறு, அத்துமீறு குரூப்பா நீ என்ற வசனத்தை எச்.ராஜா பயன்படுத்தி உள்ளார்.

33
வெளிய வந்து பேசிப்பார்..

இதனிடையே கூட்டம் ஒன்றில் பேசிய திருமாவளவன், “எச்.ராஜா ஒரு படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் அடங்கமறு அத்துமீறு கும்பலா நீ என கேட்டு போலியாக ஒரு மீசையை வைத்துக் கொண்டு, போலியான வீரத்தோடு வசனம் பேசுகிறார். இதுபோன்ற வசனத்தை திரைப்படத்தில் மட்டும் தான் பேச முடியும். வெளியில் வந்து பேசி பார்.. பேச முடியாது. சரி சினிமாவிலாவது எங்களைப்பற்றி பேசி வேண்டிய நிலை வந்துள்ளதே. திருமாவளவனை மனதில் வைத்து தான் படம் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அடங்கமறு என்பது கோட்பாடு. அது வன்முறையைத் தூண்டாது” என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories