திருமாவின் சந்தேகம் நியாயமானது..! ரஞ்சித்தின் கோரிக்கை உண்மையானது..! பாதுகாப்புக்காக குரல் கொடுக்கும் உலக நாயகன்

Published : Oct 11, 2025, 07:43 PM IST

சென்னை உயர்நீதிமன்றம் அருகே விசிக தலைவர் திருமாவளவனின் கார் மறிக்கப்பட்ட விவகாரத்தில் அவரது சந்தேகம் நியாயமானது, திருமாவின் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

PREV
14
திருமாவுக்கு தலைவலி..

கடந்த 7ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த வழக்கறிஞர் ஒருவர் மீது விசிக தலைவர் திருமாவளவனின் கார் மோதியதாகவும், இதற்கு நியாயம் கேட்கச் சென்ற வழக்கறிஞரை திருமாவளவனின் ஆதரவாளர்களும் கடுமையாக தாக்கியதாகவும் சொல்லி வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவியது. இது தொடர்பாக விளக்கம் அளித்த திருமாவளவன், எனது கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதவே இல்லை. ஆனால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வேண்டுமென்றே எனது வாகனத்தின் முன்பாக வந்து நின்றுகொண்டு பிரச்சினையை ஏற்படுத்தினார்.

24
திருமாவுக்கு எதிராக RSS சதி..?

அவர் என்னை பார்த்து முறைத்ததாலும், கையை ஓங்கிக் கொண்டு வந்ததாலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி அருகில் இருந்த அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர். இந்த விவகாரத்தில் “உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -07 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி' என்பது தெரியவருகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில்உள்ளனர் என்றும் எமது விசாரணையில் உறுதிபட தெரிகிறது. எனவே, தமிழ்நாடுஅரசு இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும். பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும். அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைகாட்சிகளைச் சார்ந்தவர்களையும் முழுமையாக அய்யமற விசாரித்திடவேண்டுமென கோருகிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

34
பா.ரஞ்சித் கோரிக்கை

இதனிடையே “உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -07 அன்று காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், அண்ணன் திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் தெரிவித்துள்ளார், இதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று இயக்குநர் பா.ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.

44
திருமாவின் பாதுகாப்பை அதிகப்படுத்துங்க..

இந்நிலையில் திருமாவளவனுக்கு ஏற்பட்ட நிகழ்வு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், “தம்பி திருமாவின் சந்தேகம் நியாயமானது. இன்னொரு தம்பி பா. ரஞ்சித்தின் அக்கறை உண்மையானது. தம்பி திருமாவளவன் சென்ற கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறை விசாரணையை வேகப்படுத்த வேண்டும். அவரது பாதுகாப்பை அதிகரிக்க தமிழ்நாடு அரசு ஆவன செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories