கை நிறைய கொட்டும் பணம்.! ட்ரோன் இயக்க சூப்பர் வாய்ப்பு - அழைப்பு விடுத்த தமிழக அரசு

Published : Aug 25, 2025, 12:01 PM IST

தமிழக அரசு, தொழில்முனைவோருக்கான ட்ரோன் பயிற்சித் திட்டத்தை சென்னையில் வரும் செப்டம்பர் 9 முதல் 11 வரை நடத்தவுள்ளது. இப்பயிற்சியில் ட்ரோன் தொழில்நுட்பம், விதிமுறைகள், நிதியுதவி உள்ளிட்டவை குறித்து விளக்கப்படும்.

PREV
14
தமிழகத்தில் வேலை வாய்ப்பு

தமிழக அரசு பல்வேறு வேலைவாய்ப்புக்களை இளைஞர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. அந்த வகையில் வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தொழில் நிறுவனங்களை தொடங்கி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஒரே இடத்தில் வேலைவாய்ப்பு உருவாக்காமல் பல மாவட்டங்களில் வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது. 

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் துறை வேலைவாய்ப்பை நடத்தப்படுகிறது. இதனால் பல ஆயிரம் பேருக்கு வேலை இந்த முகாம் மூலம் வேலை கிடைத்து வருகிறது. இதன் அடுத்த கட்டமாக சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களுக்காக பயிற்சி வழங்கி கடன் உதவி திட்டங்களையும் செயல்படுத்துகிறது.

24
ட்ரோன் இயக்க பயிற்சி

இந்த நிலையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் ட்ரோன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ட்ரோன் இயக்குவது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் ட்ரோன் பயிற்சியை வரும் 09.09.2025 முதல் 11.09.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

 இப்பயிற்சியில், ட்ரோன் தொடர்பான விதிமுறைகள் மற்றும் விமானம் இயக்கும் அடிப்படைகள் குறித்த கண்ணோட்டம் வழங்கப்படும். மேலும், ட்ரோன்களின் வகைகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள், பராமரிப்பு முறைகள், அவசரநிலைக் கருவிகள், சிமுலேட்டர் பயிற்சி மற்றும் நடைமுறைப் பயிற்சி, அசெம்பிளிங், ப்ளைட் கன்ட்ரோலர் மற்றும் சென்சார் அளவுத்திருத்தம்,

34
ட்ரோன் இயக்க 3 நாள் பயிற்சிகள்

கண்காணிப்பு மற்றும் மேப்பிங் ஒருங்கிணைப்பு. ACT மற்றும் ரேடியோ டெலிபோனிக் போன்ற தொழில்நுட்பங்கள் பயிற்சியில் இடம்பெறும். மேலும், அரசு வழங்கும் நிதியுதவிகள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களும் பயிற்சியின் ஒரு பகுதியாக விளக்கப்படும்.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

44
ட்ரோன் பயிற்சி- தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரம் மற்றும் முன்பதிவு செய்ய விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். முன்பதிவு : 9543773337 / 9360221280- இந்த முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories