இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களை கூட்ட வேண்டும் என்றும், அதில் பல்வேறு பொருள்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் குறிப்பாக, போதைப் பொருட்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை போதைப்பொருள் சீரழிக்கிறது என்றும் தெரிவித்துள்ள அவர், பள்ளியில் இருந்து 100 மீட்டர் தொலைவு வரை போதை பொருள், புகையிலை போன்ற பொருட்கள் விற்பனை இல்லாததை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, அரசின் உத்தரவை மீறி போதைப்பொருட்கள் விற்பனை நடந்தால் காவல்துறைக்கு உடனடியாக புகார்களை அளிக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.