குட்நியூஸ்.! ரூ.5000 வங்கி கணக்கில் போடும் தமிழக அரசு! யாருக்கெல்லாம் தெரியுமா?

Published : Mar 23, 2026, 05:42 PM IST

மகளிருக்கான புதிய மானியத் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் தொழில் தொடங்க மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியம் வழங்கப்படும்.

PREV
14

சமூகத்தில் பெண்களின் வளர்ச்சியைக் கொண்டே சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியினை மதிப்பிட இயலும். இந்நிலையில் பெண்களுக்காக அரசு பல்வேறு சூப்பர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம் திட்டம், புதுமைப் பெண் திட்டம், மகளிர் சுய உதவிக்குழு கடன், கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோருக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

24

அந்த வகையில் 2025-2026 ஆம் நிதியாண்டிற்காக, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ. 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 5,000 மானியத் தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தில், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

34

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள மகளிர் தமிழ்நாட்டில் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும். (பிறப்பிடச் சான்று). வயது வரம்பு 25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும். பிறந்த தேதிக்கான சான்று மற்றும் திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று (வட்டாச்சியரிடம் பெறுதல் வேண்டும் ) போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமான வரம்பு ரூ. 1.20 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் (வருமானச் சான்று வட்டாச்சியிரிடமிருந்து பெறுதல் வேண்டும்).

44

எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மகளிர் சென்னை மாவட்ட ஆட்சியரகம், சிங்கார வேலனார் மாளிகை. 8 வது தளத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவகத்தில் குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இத்திட்டத்திற்கு தகுதியுள்ள பயனாளிகள் அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுகால் தெரிவு செய்யப்படுவர். இதர விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories