ரூ. 5000 மானியம்.! புனித யாத்திரையாக நாக்பூர் செல்பவர்களுக்கு - பக்தர்கள் கொண்டாட்டம்

Published : Aug 02, 2025, 12:58 PM IST

தமிழக அரசு, பௌத்தர்கள் புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவி வழங்குகிறது. ஒருவருக்கு ரூ.5,000 வரை மானியம் வழங்கப்படும். விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்று, நவம்பர் 30, 2025க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

PREV
13
புனித பயணம்- தமிழக அரசு நிதி உதவி

தமிழக அரசு பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு புனித பயணங்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்து புனித பயணம் (மானசரோவர் மற்றும் முக்திநாத் புனித பயணங்களுக்கு நிதி உதவி வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் 500 பக்தர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது. 

கிறிஸ்தவ புனித பயணமாக இஸ்ரேல், எகிப்து, ஜோர்டான் (ஜெருசலேம், பெத்லகேம், நாசரேத், ஜோர்டான் நதி) ஆகியவற்றுக்கு பயணிக்க நிதி உதவி வழங்கப்படுகிறது. பௌத்த, ஜைன, சீக்கிய புனித பயணங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. முஸ்லிம் புனித பயணம் (ஹஜ்):ஹஜ் பயணத்திற்கு நிதி உதவி மற்றும் பயண ஏற்பாடுகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகின்றன.

23
பௌத்தர்கள் புனித பயணம்

இந்த நிலையில் பௌத்த சிறுபான்மையினர் நாக்பூர் தீஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்ர பரிவர்த்தன திருவிழாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் நிதி உதவி வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 பௌத்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-26 ஆம் ஆண்டில் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தர்ம சக்கர பரிவர்த்தன திருவிழாவிற்கு புனித பயணம் மேற்கொண்டு திரும்பியவர்களுக்கு ECS முறையில் நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 5,000/- வரை நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

33
தமிழக அரசு வழங்கும் 5ஆயிரம் மானியம்

இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை 600 001 - 6 ஆம் தளத்தில் இயங்கும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றிப் பெறலாம். மேலும் என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து www.bcmbcmw.tn.gov.in கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 30.11.2025( உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம் முதல்தளம், சேப்பாக்கம், சென்னை 600005 என்ற முகவரிக்கு சமர்ப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஐகடே தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories