தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா ஜக்கம்பட்டி இந்து மேல்நிலைப் பள்ளியில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் , திமுக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் , ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன்,பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.