OPS, TTV மொக்கை சின்னத்தை கைல வச்சுகிட்டு அதிமுக டெபாசிட்ட காலி பண்ணவங்க! மறந்திட கூடாது! மாஜி எம்.பி. KCP!

Published : Aug 02, 2025, 11:07 AM IST

முன்னாள் எம்.பி. கே.பி.பழனிசாமி, எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் அதிமுகவின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். கட்சியின் வளர்ச்சிக்காக கூட்டணி அவசியம் என்றும், ஓ.பி.எஸ், தினகரன், தேமுதிக போன்றவர்களுடன் கூட்டணி வைத்திருக்க வேண்டும்.

PREV
16

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.பழனிசாமி அடிமட்ட அதிமுக தொண்டனின் குரல் என்று எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், அடிமட்ட அதிமுக தொண்டனின் குரல் என்று அடிமட்ட #அதிமுக தொண்டனின் குரல். இந்த எடப்பாடியோட பெர்சனல் ஈகோ, அதிமுகவையும் அவங்க தொண்டர்களையும் எங்க கொண்டு போய் நிறுத்த போகுதோ. 10 தேர்தல்ல தோத்து போய் வீக்கா இருக்கற கட்சியை அதுல இருந்து வெளிய கொண்டு வரணும்னா, யார் எல்லாம் கூட வர தயாரா இருக்காங்களோ, அவங்களை எல்லாம் கூட சேர்த்துகிட்டு ஓடினாத்தான் ஜெயிக்க முடியும்.

26

ஜெயலலிதாவ கடுமையா எதிர்த்து, MGR உடம்பு இருக்கற வண்டில கூட வர கூடாதுன்னு கீழ புடிச்சு தள்ளி விட்ட R.M. வீரப்பன், நெடுஞ்செழியன எல்லாம் ஜெயலலிதா கூப்பிட்டு மினிஸ்டர் ஆக்கி கூட வச்சுகிட்டது எல்லாம் வரலாறு. ஜெயலலிதா ஈகோவ விடவா EPS ஈகோ பெருசு ??? ஜெயலலிதா மாதிரி ஆளே, நம்ம பெர்சனல் ஈகோவவிட கட்சி முக்கியம்னு முடிவு எடுக்கும்போது, EPS எல்லாம் இன்னும் யோசிச்சு இருக்கணும்.

36

OPS, தினகரன் எல்லாம் தனியா பார்த்தா ஒன்னும் இல்லைதான், ஆனா அவங்க ரெண்டு பேரும்தான் ஒரு மொக்கை சின்னத்தை கைல வச்சுகிட்டு "இரட்டை இலை" வச்சு இருந்த அதிமுக டெபாசிட்ட கழட்டினாங்கன்றத மறந்திட கூடாது. எந்த நிபந்தனையும் இல்லாம வர தயாரா இருந்த OPS விட்டு இருக்க கூடாது, தினகரன் விஷயத்தை BJP முடிவுக்கு விட்டுடனும், இல்லேன்னா தென் மாவட்டத்தில் மறுபடியும் அதிமுக டெபாசிட் டான்ஸ் ஆடிடும்.

46

அதே மாதிரி தேமுதிகவுக்கு கொடுக்கிறேன்னு சொல்லி இருந்த ராஜ்யசபா குடுத்து இருக்கணும், அதையும் கொடுக்காம, அவங்க வச்சு இருக்கற 2% ஓட்டுலயும் இப்போ ஓட்டை விழுந்திடிச்சு.

56

கம்யூனிஸ்ட் எல்லாம் என்ன 50% ஓட்டு வச்சு இருக்காங்கன்னா திமுக கூடவே கூட்டிட்டு சுத்தறாங்க ?? அவங்களுக்கு இருக்கற 1% ஓட்டு கூட முக்கியம், ஓட்டு கன்சாலிடேஷேசன்தான் ஒரு தேர்தல் ஜெயிக்க முக்கியம்னு தெரிஞ்சதுனால. திமுக ஒரே ஒரு கருணாஸ் வந்தா கூட விடமாட்டாங்க, ஏன்னா அவங்களுக்கு தெரியும் ஒரே ஒரு ஓட்டு கூட ஒரு தொகுதில வெற்றிய தீர்மானிக்கும்னு, இப்போ கூட OPS திமுகவுக்கு போன, கூப்பிட்டு பெரிய போஸ்ட் போட்டு குடுத்து, தேனில நிக்க வச்சு, ஜெயிச்ச உடனே மினிஸ்டர் ஆக்கி வச்சுக்குவாங்க.

66

3% ஓட்டு வாங்கிட்டு இருந்த பிஜேபிய 12%க்கு கொண்டு போன அண்ணாமலை இருக்க கூடாது, OPS சேர்த்துக்க மாட்டேன், தினகரன் ஆகாது, தேமுதிகவுக்கு எதுவும் பண்ண மாட்டேன் ???? எப்படியா ஜெய்பீங்க ??? இவங்க அடிக்கிற கூத்துல விஜய எதிர்க்கட்சி தலைவர் ஆக்கி அழகு பாக்காம விடமாட்டாங்க போல.... EPS ஒரு வேளை விஜய் ஃபேனோன்னு டவுட் வருது. கட்சிய எங்க கொண்டு போய் நிறுத்த போறாங்களோ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories