இது தொடர்பாக தமிழக அரசு குழு ஒன்றை அறிவித்துள்ளது. அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படியைல பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாக சரண் விடுப்பு முக்கிய கோரிக்கையாக உள்ளது. அரசு ஊழியர்கள் தாங்கள் விடுப்பு எடுக்காத நாட்களை ஒப்படைத்து அதற்கு பணமாக பெறமுடியும், அந்த வகையில் ஒரு ஊழியர் தனது சம்பாதித்த விடுப்பில் இருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாட்களை சரண் செய்யலாம்.
இதற்கு ஈடாக, அந்த விடுப்பு நாட்களுக்கான சம்பளத்தை பணமாகப் பெறலாம். அந்த வகையில் தமிழகத்தில் நடைமுறையில் இருந்த சரண் விடுப்பு திட்டம் 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில், கடும் நிதி நெருக்கடி காரணமாக ஈட்டிய விடுப்பை சரண் செய்து, பணப்பலன் பெறும் முறை நிறுத்தப்பட்டது.