சென்னையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: எல்லா விதங்களிலும் தோற்றுப் போன அரசாங்கம் இருந்து கொண்டிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் தமிழக சட்டம் - ஒழுங்கு இல்லை. ஏற்கெனவே, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் 5 காவலர்களால் அடித்து கொல்லப்பட்டார். நியாயம், தர்மத்தை பற்றி கவலைப்படாமல் உண்மையை எப்படியாவது மறைப்பதற்கு அரசு முயற்சி செய்து வருகிறது. அஜித் குமார் விஷயத்தில் அந்த வீடியோ எடுக்கப்படவில்லை என்றால் இன்றைக்கு இந்த கொலை வழக்கு முடிவுக்கு வந்திருக்கும். அவர் வீட்டுக்கு முதலில் போன அரசியல்வாதி என்ற முறையில் சிபிஐ விசாரணை கேட்ட பிறகு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது திருநெல்வேலியில் கவின் என்ற இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார்.