தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் தற்போது 7.5% உள்ள இட ஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. நீட் தேர்வின் கொடுமையை சுட்டிக்காட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இட ஒதுக்கீடு உயர்வு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றார்.
கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இலவச கல்வி திட்டம், மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை, இலவச பேருந்து பயணம், காலை, மதிய உணவு திட்டம் போன்ற பல திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது.
மேலும் உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரம் மருத்துவத்துறையிலும் தமிழக மாணவர்கள் அதிகளவு சேர வேண்டும் என தமிழக அரசு திட்டமிட்டிருந்த நிலையில்,
25
நீட் தேர்வு அச்சத்தில் மாணவர்கள்
நீட் தேர்வு எழுதினால் மட்டுமே மருத்துவ தேர்வில் சேர முடியும் என்ற நிலை உருவானது. இதன் காரணமாக கிராம்ப்புற மாணவர்களின் கனவானது பாதிக்கப்பட்டது. நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். எனவே நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக, திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
35
அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு
இதனையடுத்து தான் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களுக்கு சலுகை வழங்கும் வகையில் புதிய நடைமுறையை கொண்டு வந்தது. அதன் படி அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்து கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளியில் படித்த 100க்கணக்கான மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்து பயன் பெற்றனர். இந்த நிலையில் மருத்துவ படிப்பில் தற்போது வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை 10 சதவிகிதமாக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வு மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் வகையில் ஒரு கொடுமையான தேர்வாக உள்ளது என்றும் தாலியை கழட்டி வைத்து விட்டு நீட் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்லியதெல்லாம் வரலாறு காணாத அத்துமிரல் என விமர்சித்தார்.
55
சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டை 7.5 சதவீதத்திலிருந்து பத்து சதவீதம் வரை உயர்த்துவது குறித்து சட்ட விதிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்படும் என்று கூறிய அமைச்சர், அவசரகதியாக அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஓதுக்கீட்டை உயர்த்தும் பட்சத்தில் சிலர் நீதிமன்றத்தை அணுகி பல்வேறு பிரச்சனைகளை சிக்கல்களை எழுப்பக்கூடும்.
எனவே அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டை 10% வரை உயர்த்துவது குறித்து சட்ட வல்லுனர்களின் ஆலோசனை அவசியமானது , சட்ட வல்லுநர்களின் ஆலோசனையின் அடிப்படையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார்