2 ஆண்டு சிறை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம்.! மகளிர் விடுதிக்கு லாஸ்ட் வார்னிங் கொடுத்த அரசு

First Published | Oct 8, 2024, 3:00 PM IST

சென்னையில் செயல்படும் அனைத்து தனியார் மகளிர் விடுதிகளும் நவம்பர் 15ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பதிவு செய்யாத விடுதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலை தேடி வெளியூர் பயணம்

வேலை தேடியும், படிப்பிற்காகவும் லட்சக்கணக்கானோர் பல்வேறு மாவட்டங்கள் மற்றம் பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்கிறார்கள். அந்த வகையில் பெண்களும் பெற்றோர்களை விட்டு பணிக்காகவும் படிப்பிற்காகவும் தனியார் விடுதிகளில் தங்கி படித்து வருகிறார்கள். இந்த நிலையில் பெண்களுக்கான தனியார் விடுதியில் சரிவர பாதுகாப்பு இல்லாத சூழலும், அடிப்படை வசதிகளும் இல்லையென தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது மேலும் அனுமதி இல்லாமல் பல இடங்களில் விடுதியானது நடைபெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளது. 
 

விடுதிகளை பதிவு செய்திடுக

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவுசெய்யப்படாத விடுதிகள் இந்த  http://tnswp.com இணையதள முகவரியின் மூலமாக பதிவு செய்யலாம்.

Tap to resize

hostel room

எந்த, எந்த சான்றுகள் தேவை

இப்பதிவு மேற்கொள்ள அறக்கட்டளை பதிவு பத்திரம்,  சொந்த கட்டடம்/ வாடகை ஒப்பந்த பத்திரம், கட்டிட வரைபடம், கட்டிட உறுதிச்சான்று. தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று. காவல்துறையின் சரிபார்ப்பு சான்று, உணவு சான்றிதழ்  IT& Audit Statement மற்றும் சுகாதாரதுறைத்சான்று ஆகிய சான்றுகளுடன் http://tnswp.com இணையதள போர்டல் மூலமாக வருகிற நவம்பர் மாதம் 15 ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்திட வேண்டும். மேலும் இப்பதிவு குறித்து சந்தேகங்களுக்கு  9150056800 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2ஆண்டு சிறை- 50ஆயிரம் அபராதம்

அவ்வாறு முறையாக பதிவு செய்யப்படாத தனியர் விடுதி மற்றும் இணைநிர்வாகிகள் மீது சட்டப்படி காவல்துறை மூலமாக வழக்குபதிவு செய்து அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் ) அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாவட்டத்தில் செயல்படும் மகளிர் விடுதிகளுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர்  ரஷ்மி சித்தார்த் ஜகடே, அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

Latest Videos

click me!