மாஜி அமைச்சர் தளவாய் சுந்தரத்தை கட்சி பதவியில் இருந்து தூக்கி அடித்த எடப்பாடி.! இது தான் காரணமா.?

First Published | Oct 8, 2024, 2:15 PM IST

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல பிளவுகளாக பிரிந்துள்ள அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரத்தை கட்சி பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கம் செய்துள்ளார். பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருவதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

Edappadi Palaniswami

அதிமுகவும் உட்கட்சி மோதலும்

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக பல பிளவுகளாக பிரிந்துள்ளது. இதன் காரணமாக அனைத்து தேர்தல்களிலும் தோல்வியே பரிசாக கிடைத்து வருகிறது. இதனையடுத்து மீண்டும் அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் கட்சியை ஒன்றிணைக்க பல்வேறு நடவடிக்கைகளை மூத்த தலைவர்கள் மறைமுகமாக மேற்கொண்டுள்ளனர். மேலும் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுக வெளியேறி தனியாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் பாஜகவினர் அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு அதிமுகவினரும் பதிலடி கொடுத்து வருகின்றர்.

தளவாய் சுந்தரம் நீக்கம்

இந்த இந்த நிலையில் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரத்தை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் வகையில் செயல்பட்டதாகவும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு முரணான மாறுபட்டு நடந்துகொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில்,

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திரு. என். தளவாய்சுந்தரம், M.L.A., அவர்கள், தான் வகித்து வரும் கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

தளவாய் சுந்தரம் நீக்கம்- காரணம் என்ன.?

இந்த நிலையில் பாஜகவிற்கு எதிராக அதிமுக செயல்பட்டு வரும் நிலையில், பாஜகவின் மைய அமைப்பான ஆர்எஸ்எஸ் பேரணியை தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு  தொடங்கி வைத்துள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. மேலும் பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருவதாலும் கட்சி பொறுப்பில் இருந்தும் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்ததரம் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

thalavai sundaram

யார் இந்த தளவாய் சுந்தரம்

தற்போது கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினராக உள்ள தளவாய் சுந்தரம். 1996 ஆம் ஆண்டு முதல் 2001 வரை அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். அதனை தொடர்ந்து,  2001 சட்டப்பேரவை தேர்தலில், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் வெற்றிப் பெற்று ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.  

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட அவர், 2021 சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்று தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அதிமுகவில் அமைப்பு செயலாளராகவும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராகவும் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!