வேலை இல்லாதவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசின் அடுத்த அசத்தல் திட்டம்

First Published | Sep 19, 2024, 11:05 AM IST

தமிழகத்தில் பல லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவிடும் வகையில் சூப்பர் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் 10ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது..

வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள்

நாடு முழுவதும் லட்சக்கணக்கான பள்ளி மற்றும் உயர்கல்வித்துறை உள்ளது. இதில் பல்வேறு படிப்புகளில் படித்து வருடம் தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையை தேடி வருகின்றனர்.   இந்தியாவின் 37 கோடி இளைஞர்களில் குறைந்தது 10 கோடி பேர் கல்வி, வேலை வாய்ப்பு அல்லது பயிற்சியில் இல்லை என கூறப்படுகிறது.

இதில் குறிப்பாக 2000ஆம் ஆண்டில் படித்த இளைஞர்களில் 35 சதவிகிதம் பேர் வேலையில்லாத நிலையில் இருந்தனர். அந்த எண்ணிக்கையானது கண்டந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இரண்டு மடங்காக அதாவது 66% ஆக அதிகரித்துள்ளது என ஓர் ஆய்வு அறிக்கை கூறுகிறது. இந்த நிலையில் படித்த இளைஞர்களுக்கு வேலையை ஏற்படுத்திக்கொடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

jobs

மத்திய அரசு பணிக்கு தேர்வு

அந்த வகையில் மத்திய அரசு பணியிடங்களில் காலியாக இருக்கும் இடங்களுக்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. குறிப்பாக மத்திய அரசின் மிகப்பெரிய துறையான ரயில்வே துறையில் லட்சக்கணக்கான வேலைக்கு பணியாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக தேர்வின் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதே போல தமிழக அரசும் காலியாக உள்ள பணியிடங்களை நிரம்ப அவ்வப்போது தமிழ்நாடு அரசு பணியாளர் மூலம் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் இன்னும் 6 மாத காலத்திற்குள் 75ஆயிரம் முதல் 1 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆண்டு தோறும் பல லட்சம் பேர் படிப்பு முடித்து வெளியே வரும் நிலையில் அனைவருக்கும் அரசு வேலையை வழங்கமுடியாத நிலை உள்ளது.

Tap to resize

தனியார் துறையில் வேலை வாய்ப்பு

இதனையடுத்து தான் இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தமிழக அரசு திட்டங்கள் தீட்டி வருகிறது. பல்வேறு வெளிநாட்டு முதலீட்டாளர்களை  தமிழகத்திற்கு தொழில் தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் லட்சக்கணக்கான தனியார் துறை வேலை வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இதனால் வெளிமாநிலத்தை சேர்ந்த இளைஞர்களும் தமிழகத்தில் பல்வேறு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். இது மட்டுமில்லாமல் தமிழக அரசு சார்பாக பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு பணியாளரை தேர்வு செய்து வருகிறது. 

வேலைவாய்ப்பு முகாம்

இந்தநிலையில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்து வேலை இல்லாத இளைஞர்களுக்கு கை நிறைய சம்பளத்தோடு வேலைவாய்ப்பை வழங்க சிறப்பு முகாமை நடத்தி வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் வருகிற செப்டம்பர் 21ஆம் தேதி (21-09-2024) சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மல்லசமுத்திரம் மகேந்திரா பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்  நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு வேட்டு; காத்திருக்கும் ரெட் கார்டு.! கட்டுப்பாடுகள் என்னென்ன?

job fair

வேலை வாய்ப்பு முகாம் சிறப்பு அம்சங்கள்

150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், 10,000 த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புமுகாம்களில் கலந்து கொண்டு பணியாளரைகள் தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகளும் நடைபெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

கல்வித்தகுதிகள்

8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ டிப்ளமோ நர்சிங் பார்மஸி, பொறியியல்

மேலும் விவரங்களுக்கு

PH: 04286-222260, 6380369124

Email id: jobfairnkl2022@gmail.com / 

மேலும் தனியார் துறை வேலைவாய்ப்பு தொடர்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. 
 

இலவச பேருந்து வசதி

தனியார் துறை வேலைவாய்ப்பில் கலந்து கொள்பவர்களுக்கு இலவச பேருந்து வசதியும் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு  முகாம் நடைபெறும் நாளன்று காலை 8 மணிக்கு கல்லூரி வாகனம் புறப்படும். இந்த வாகனம் நாமக்கல், இராசிபுரம், நாமகிரிபேட்டை, திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர் வழியாக தனியார் வேலை வாய்ப்பு முகாம் மையத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் இல்லையெனவும் அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Latest Videos

click me!