Railway Department
இந்தியாவில் போக்குவரத்து துறையில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வே துறை. பொதுமக்கள் தொலைதூர பயணங்களுக்கு குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பேருந்தை விட ரயில் பயணத்தை அதிகம் பேர் விரும்புகின்றனர். இதனால் நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அனைத்து ரயில்களிலும் 3 மாதங்களுக்கு முன்பாகவே ரிசர்வேஷன் செய்யப்பட்டு விடுகிறது.
Southern Railway
வடமாநிலங்கள், தென் மாநிலங்கள் என அனைத்துப் பகுதி மக்களும் ரயில் சேவையை அதிகளவு பயன்படுத்துகின்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் எப்போதும் நிரம்பியே காணப்படுகின்றன. இந்நிலையில் பயணிகளுக்கு பாதுகாப்புக்காக அவ்வப்போது தண்டவாள பராமரிப்பு பணிகள் தமிழகம் அவ்வப்போது நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மதுரை, திண்டுக்கல், சமயநல்லூர் ஆகிய பகுதிகளில் இயக்கப்படும் ரயில் சேவையில் செப்டம்பர் 18ம் அதாவது நேற்று முதல் அக்டோபர் 8ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Madurai
பகுதியாக ரத்து
ஈரோட்டிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் ஈரோடு- செங்கோட்டை விரைவு ரயில் செப்டம்பர் 18-ம் தேதி முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை (செப்டம்பர் 24, அக்டோபர் 1 தவிர) திண்டுக்கல்லில் நிறுத்தப்படும். திண்டுக்கல் - செங்கோட்டை சேவை ரத்து செய்யப்பட்டிருக்கும். மறுமார்க்கத்தில், செங்கோட்டையிலிருந்து காலை 5 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை - ஈரோடு விரைவு ரயில் செப்டம்பர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை (செப்டம்பர் 24, அக்டோபர் 2 தவிர) திண்டுக்கல்லிலிருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும்.
Train operation alternative route
மாற்றுப் பாதையில் ரயில் இயக்கம்
செங்கோட்டையிலிருந்து காலை 7.05 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை- மயிலாடுதுறை பயணிகள் விரைவு ரயில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 7 வரை (செப்டம்பர் 25, அக்டோபர் 2 தவிர) கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி மணப்பாறை வழியே செல்வதற்கு பதிலாக, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியே இயக்கப்படும். குருவாயூரிருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்படும் குருவாயூர் - சென்னை விரைவு ரயில் செப்டம்பர் 23, 25, 26, 27, அக்மோபர் 2, 3 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியே இயக்கப்படும்.
Nagercoil - Kacheguda Express Train
நாகர்கோவில் - கச்சேகுடா விரைவு ரயில்
நாகர்கோவிலிலிருந்து காலை 9.15 மணிக்குப் புறப்படும் நாகர்கோவில் - கச்சேகுடா விரைவு ரயில் செப்டம்பர் 28-ம் தேதி திண்டுக்கல், கரூர் வழியே இயக்கப்படும். மதுரையிலிருந்து காலை 11.55 மணிக்குப் புறப்படும் மதுரை- பிகானிர் விரைவு ரயில் செப்டம்பர் 26, அக்டோபர் 3 ஆகிய தேதிகளில் மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியே இயக்கப்படும்
Nagercoil-Mumbai Express train
நாகர்கோவில்- மும்பை விரைவு ரயில்
நாகர்கோவிலிருந்து காலை 6.15 மணிக்குப் புறப்படும் நாகர்கோவில்- மும்பை விரைவு ரயில் செப்டம்பர் 26, அக்டோபர் 3 ஆகிய தேதிகளிலும், கன்னியாகுமரியிலிருந்து காலை 5.50 மணிக்குப் புறப்படும் கன்னியாகுமரி- ஹவுரா அதிவிரைவு ரயில் செப்டம்பர் 28-ம் தேதியும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.