அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கொண்டாட்டம்.! 1 லட்சம் ரூபாய் முன்பணம்- அள்ளிக்கொடுக்கும் அரசு

Published : Jun 28, 2025, 10:08 AM IST

தமிழக அரசு ஊழியர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்கான முன்பணத்தை உயர்த்தியுள்ளது. தொழிற்கல்விக்கு ரூ.1 லட்சமாகவும், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ.50,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

PREV
14
அரசு ஊழியர்களுக்கான திட்டங்கள்

அரசு பணியாளர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்காக வழங்கப்படும் முன்பணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அரசு தங்களது ஊழியர்களுக்கு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு மற்றும் திருமண உதவி உள்ளிட்ட வங்கி சலுகைகள் கட்டணமின்றி வழங்கப்படுவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.

24
அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம்

அடுத்தாக அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்காக ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் பெறலாம். இது தமிழக அரசின் அரசாணை மூலம் வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்காக திருமண நிதி உதவி திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது . மேலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டு, 2025 செப்டம்பர் மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கல்விக்கும் முக்கியத்துவத்தை அரசு கொடுத்து வருகிறது. தமிழக அரசு கல்வித்துறையில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவும், அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்யவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

34
கல்விக்காக அரசின் திட்டங்கள்

இது மாணவர்களின் பசியைப் போக்கி, கற்றல் திறனை மேம்படுத்த உதவுகிறது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்காக நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச சீருடை, மடிக்கணினி, காலணிகள், புத்தகப்பை, கணித உபகரணப்பெட்டி, வண்ணப் பென்சில்கள் மற்றும் கிரையான்கள் வழங்கப்படுகின்றன. 

இந்த நிலையில் அரசுப் பணியாளர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டிலிருந்து உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்கல்வி பயில்வதற்கு ஏற்கனவே வழங்கி வந்த 50 ஆயிரத்தில் இருந்து ஒரு இலட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

44
அரசு ஊழியர்களுக்கு முன்பணம் உயர்வு

கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் பயில 25 ஆயிரம் ரூபாயிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவை கூட்ட தொடரில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவை விதி எண் 110-ன் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் 9 அறிவிப்புகளை வெளியிட்டார். இதனை செயல்படுத்தும் விதமாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கல்வி முன்பணம் உயர்வால் அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில பெரும் உதவியாக அமைந்துள்ளது. இதனை அரசு ஊழியர்கள் வரவேற்றுள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories